»   »  சிவாஜி டிவிடி வதந்தி!

சிவாஜி டிவிடி வதந்தி!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி பட டிவிடி பாத்தாச்சா? இதுதான் கோலிவுட்டைக் கலக்கும் புது வதந்தி!

சிவாஜி பட பூஜையிலிருந்தே அந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது. அவுட்டோர் ஷூட்டிங்குக்காகஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குப் போனபோது ரஜினி சம்பந்தப்பட்ட போட்டோக்கள் வெளியாகி ஷங்கருக்கு ஷாக்கொடுத்தது.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை படு ரகசியமாக நடத்தி வந்தார் ஷங்கர். படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துள்ளது.இந்த நிலையில் புதிதாக ஒரு வதந்தி சிவாஜி யூனிட்டை கலக்கி வருகிறது.

சிவாஜி படத்தின் டிவிடி வெளியாகி விட்டது என்பதுதான் அந்த டுபாக்கூர் வதந்தி. திரையுலகினர் ஒருவருக்கொருவர்பார்த்துக் கொண்டால் கேட்டுக் கொள்ளும் கேள்வியாக அது மாறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு போலீஸார் நடத்திய திருட்டு விசிடி வேட்டையின்போது, பருத்தி வீரன் படத்தின் டிவிடி சிக்கியது.இது சிவாஜி டிவிடி குறித்த வதந்தியை மேலும் பரபரப்பாக்கியது. வந்திருந்தாலும் வந்திருக்குமோ என்று பலரும் எண்ணத்தொடங்கினர்.

ஆனால், சிவாஜி படத்தின் படப்பிடிப்பே இப்போதுதான் முடிந்துள்ளது என்பதுதான் உண்மை. அரும்பாடுபட்டு எடுத்துமுடித்துள்ள படத்தை ரஜினிக்குப் போட்டுக் காண்பித்துள்ளாராம் ஷங்கர்.

முழுப் படத்தையும் பார்த்து முடித்த ரஜினி அசந்து போய் விட்டாராம். படத்தின் உருவாக்கம், தரம், அழகுஆகியவற்றை ஷங்கரிடம் மனம் திறந்து பாராட்டி விட்டாராம். அத்தோடு நில்லாமல் ஷங்கரை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார் சூப்பர் ஸ்டார்.

இதன் பிறகுதான் திருப்பதிக்குச் சென்று வெங்கடாலசபதியை சுமார் ஒரு மணி நேரம் மனமுருக தரிசித்துள்ளார். படம்மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு சிறப்புப் பூஜைகளை செய்துள்ளார்.

இந்த நிலையிைல்தான் டிவிடி வதந்தி கிளம்பி சிவாஜி யூனிட்டை அப்செட் ஆக்கியுள்ளது. ஒரு டிவிடி 1000 ரூபாய்க்குவிற்பதாகவும் கூறப்படுகிறது. இந்த டிவிடி வதந்தி குறித்து சிவாஜி படத்தின் பி.ஆர்.ஓ. பெரு. துளசிபழனிவேலிடம்கேட்டபோது, சிவாஜி படம் குறித்து நான் கேள்விப்படும் 3வது வதந்தி சார் இது.

50 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் சில கருப்பு ஆடுகள் உள்ளே புகுந்து இந்தப்படத்தை சீரழிக்க இப்படி தவறான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட வதந்திகளைபரப்புவோர் யார் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியவந்தால் நாங்கள் அவர்களை கடுமையாக தண்டிக்கத் தவறமாட்டோம் என்றார்.

சிவாஜிக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil