Just In
- 10 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 21 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 2 hrs ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Don't Miss!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- News
இந்திய விவசாயிகள் ஒடுக்கப்படுவது கவலையளிக்கிறது.. மலாலா யூசுப்சாய் பேச்சு
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்.. நம்பர் நடிகையால் லேட்டாகும் ஷூட்டிங்.. குவிகிறது கம்ப்ளைண்ட்!
சென்னை: அந்த காதல் படத்தால் அடித்த யோகம், ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அந்த சின்ன நம்பர் நடிகை.
அவரை நம்பி பல கோடிகளை கொட்டி பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து வரும் இயக்குநர்களுக்கு, தற்போது ஒரு புதிய டென்ஷன் உருவாகி உள்ளதாம்.
வெளிநாட்டில் இருந்து இங்கே ஷூட்டிங்கை மாற்ற சொன்னது மட்டுமல்லாமல், விரைவில் ரிலீசாகவுள்ள தனது படத்தின் புரொமோஷனுக்காக அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் லேட் செய்து வருகிறாராம்.

வயசாகிடுச்சு
கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கும் மேலாக கோலிவுட்டில் காலத்தை ஓட்டி வருகிறார் அந்த சின்ன நம்பர் நடிகை. ஒரு நல்ல படம் கொடுத்தால், கூடவே ஒரு மரண மொக்கையான படத்தையும் கொடுத்து, உயரும் தனது மார்க்கெட்டை தானே தலையில் மண் வாரி போடுவது போல கெடுத்து வருகிறார்.

அது மட்டும் செட்டாகுது
என்ன வயசானாலும், கண்களில் காதலை தேக்கிக் காட்டி, நடித்து அசத்தி வரும் அந்த பிரபல நடிகைக்கு காதல் படங்கள் மட்டும் அல்வா சாப்பிடுவது போல, செட்டாகி ஹிட்டாகி விடுகிறது. அந்த காதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அம்மணி.

கைவசம்
தற்போது, அந்த சின்ன நம்பர் நடிகை கைவசம் இரண்டு பெரிய படங்கள் இருக்கிறது. போதா குறைக்கு, ஹீரோ இல்லாமல், தனியாக நடித்துள்ள இரண்டு படங்கள் வேற இருக்கிறது. இதனால், எதில், முழு கவனத்தை செலுத்துவது என்று புரியாமல் திணறி வருகிறாராம் அந்த நடிகை.

ரிலீஸ் பிரச்சனை
காதல் படத்தை தொடர்ந்து, உச்ச நட்சத்திரம் கூட ஒரு சின்ன போர்ஷனில் நடித்த அந்த நடிகைக்கு அந்த விளையாட்டு படம் கிடைத்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் உருவாகவில்லை என்பதால், ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், ஒருவழியாக அந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் முயற்சியில், அந்த பிரபல நடிகை ஈடுபட்டு வருகிறார்.

ஷூட்டிங் தாமதம்
இதனால், அந்த பெரிய பட்ஜெட் படத்தின் ஷூட்டிங்கிற்கு போகாமல், தனது படத்தின் ரிலீஸ் வேலைகளிலேயே கவனம் செலுத்தி வருகிறாராம் அந்த சின்ன நம்பர் நடிகை. இதனால், கடுப்பான உச்ச இயக்குநர் கடும் அப்செட்டில் இருப்பதாகவும், கோலிவுட்டில் கிசு கிசுக்கள் எழுந்து வருகின்றன.

அது மட்டுமல்ல
அந்த பிரம்மாண்ட படம் மட்டுமின்றி, வேற்று மொழி படம் ஒன்றிலும், அந்த நடிகையை கமீட் செய்து விட்டு, அந்த த்ரில்லர் பட இயக்குநரும் நடிகரும் புலம்பி வருகிறார்களாம். எல்லாருக்கும் கால்ஷீட் கொடுத்து விட்டு, இவர் இஷ்டத்துக்கு இப்படி பொறுப்பில்லாமல் நடந்து வருகிறாரே என்று புகார்களும் குவிந்து வருகிறதாம். இந்த விவகாரம் பூதாகரம் ஆனால், மறுபடியும் தனது மார்க்கெட் சரிந்து விடும் என்பதை உணர்ந்த அந்த ஹீரோயின், சாதுர்யமாக பேசி, காய்களை நகர்த்தி வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.