கொடுத்த வாக்கை மீறிய சர்ச்சை குறும்பட இயக்குநர்?
Recommended Video

கொடுத்த வாக்கை மீறிய இயக்குநர்
பாரதியின் வரிகளை வைத்து சர்ச்சை குறும்படம் இயக்கி பரபரப்பான இயக்குநர் அதை தயாரித்த இயக்குநருக்குக் கொடுத்த வாக்கை மீறி விட்டாராம்.
பெல் இயக்குநரிடம் உதவியாளராக இருந்த இந்த இளம் இயக்குநர் ஸ்டைலிஷ் இயக்குநரின் கம்பெனியில் சர்ச்சையான கதைகளை சொல்லி குறும்படம் பண்ணும் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்திலேயே இந்த கம்பெனிக்கு படங்கள் பண்ணுவது என்று கையெழுத்து போட்டுவிட்டாராம் இயக்குநர்.
ஆனால் குறும்படங்கள் வெளியாகும் முன்பே வேறு ஒரு கம்பெனிக்கு படம் பண்ணி விட்டார். இரண்டாவது படமாவது தங்கள் கம்பெனிக்கு பண்ணுவார் என்று எதிர்பார்த்தார் ஸ்டைலிஷ். ஆனால் பெரிய நம்பர் நடிகையை வைத்து நடிகையின் கம்பெனிக்கே படம் இயக்க்விருக்கிறார்.
வார்த்தை தவறி விட்டாய் என்று பாரதியின் வரிகளையே பாடிக்கொண்டிருக்கிறாராம் ஸ்டைலிஷ்!
Comments


Click it and Unblock the Notifications