»   »  இயக்குநரை குமுறிய ஷ்ரேய!

இயக்குநரை குமுறிய ஷ்ரேய!

Subscribe to Oneindia Tamil

திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்டரில் நடிக்க வைத்து தமிழ் சினிமாவில் ஷ்ரேயா ரெட்டிக்கு அறிமுகம் ஏற்படுத்திக்கொடுத்த இயக்குநர் தருண் கோபிக்கும், ஷ்ரேயாவுக்கும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பெரியசண்டை நடந்து களேபரமாகி விட்டதாம்.

தருண் கோபியின் இயக்கத்தில் விஷால், ரீமா சென், ஷ்ரேயா ரெட்டி நடிக்க உருவான படம்தான் திமிரு.விஷாலின் அப்பாதான் இப்படத்தைத் தயாரித்தார். படம் சூப்பர் ஹிட் ஆகி குண்டக்க மண்டக்க ஓடியதால்,படத்தின் பாதிக் காட்சிகளை நான் தான் எடுத்தேன் அல்டாப்பு பண்ண ஆரம்பித்தார் விஷால்.

கடுப்பாகிப் போன தருண் கோபி, விஷாலை வைத்து அடுத்து எடுப்பதாக இருந்த படத்தை டிராப் செய்துவிட்டார். அத்தோடு அதே கதையை மாதவனை வைத்து இயக்கப் போவதாக அறிவித்தார்.

இதனால் டர் ஆகிப் போன விஷால், தருண் கோபியை சமரசப்படுத்த முயன்றார். ஆனால் கோபி அதைகண்டுகொள்ளவில்லை. இதனால் அப்செட் ஆனார் விஷால்.

தனது அடுத்த படத்திலும் ஷ்ரேயா ரெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்த தருண் கோபி, இதுதொடர்பாகஅவரிடம் போனில் பேசியுள்ளார். ஷ்ரேயாவும் சரி என்று ஒப்புக் கொண்டாராம்.

இதைத் தொடர்ந்து அடுத்த படத்தின் கதை குறித்து விவாதிக்க ஷ்ரேயா ரெட்டியை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குவருமாறு அழைத்திருக்கிறார் கோபி. சரி என்ற ஷ்ரேயாவும், சினிமா பி.ஆர்.ஓ. சந்துருவுடன் அந்தஹோட்டலுக்கு வந்துள்ளார்.

அவர் வந்தபோது கோபி ரெட்டையாக இருந்துள்ளார். அதாவது அவருக்குள் உற்சாக பானம் சில ரவுண்டுகள்போயிருந்ததாம். குழறலாக வாங்கோ, வாங்கோன்னு ரெட்டியை வரவேற்ற தருண் கோபி படம் குறித்துப் பேசஆரம்பித்துள்ளார்.

ஆனால் பேச்சு அப்படியே வேறு பக்கம் டிராக் மாறியதாம். இதனால் குழம்பிப் போன ரெட்டி, இதென்னபடத்திற்குச் சம்பந்தம் இல்லாததாக பேசுகிறீர்களே என்று இழுத்துள்ளார். இதனால் தான் சொல்ல நினைத்ததைபடு தெளிவாக ஓபன் பண்ணியுள்ளார் கோபி.

அவ்வளவுதான் ஆங்கார காளியாகி விட்டாரம் ஈஸ்வரி. இதுக்குத்தான் கூப்பிட்டீங்களா என்று கோபமாககூப்பிட்டபடி அங்கிருந்து எழுந்து கிளம்ப முயன்றாராம். ஆனால் விடாத கோபி, ஷ்ரேயாவின் கையைப் பிடித்துஇழுத்த முத்தமிட முயன்றாராம்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுப் போனதாம். கோபியின் முகத்தில் சரமாரியாக குத்து விட்ட ஷ்ரேயாஅங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஹோட்டல் ஊழியர்கள் சிலரும் ஓடி வந்து அவரை கோபியிடமிருந்துமீட்டனராம். பிறகு கோபியை அங்கிருந்து அப்புறப்படுத்தினராம்.

கோலிவுட்டைக் கலக்கி வரும் லேட்டஸ்ட் கிசுகிசு இதுதானாம். ஆனால், இப்படியெல்லாம் நடக்கவில்லை எனகோபி தரப்பு கூறுகிறது. சிலரது தூண்டுதல் காரணமாக இப்படி ஒரு வதந்தி வேண்டும் என்றே பரப்பப்பட்டுவருவதாக கோபி தரப்பு குறுகிறது.

கோபி குறுவது உண்மையா அல்லது ஷ்ரேயா குறியது உண்மையா என்பது தெரியாமல் கோலிவுட்டில் குழப்பம்நிலவுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil