»   »  சிம்ரன் போய் பிரியா

சிம்ரன் போய் பிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்ரனுக்கு போக வேண்டிய வாய்ப்பு பிரியா என்ற புதுமுகத்துக்குப் போய்விட்டதாம்.

தமிழ் சினிமாவை கலக்கு கலக்கென்று கலக்கிய சிம்ரன் இப்போது அருமையான இல்லத்தரசி, அழகானகுழந்தைக்கு அம்மா. ஆனாலும் சினிமா மீதுள்ள மோகம் இன்னும் சிம்ஸுக்குக் குறைந்தபாடில்லை.

இதனால், தமிழிலும் தெலுங்கிலும் வாய்ப்பு தேடி வருகிறார். இருந்தாலும் கொடுப்பார்தான் யாரும் இல்லை.இந்த நிலையில் தெலுங்கில் ஒரு படம் கிடைத்தது. அதிலும் கூட குடு குடு கிழவி வேடத்தில் நடிக்கிறாராம் சிம்ரன்.

இந்த நிலையில் தமிழில் அவரைத் தேடி ஒரு பட வாய்ப்பு வந்தது. பார்த்திபன் நடிப்பதாக ரொம்ப நாளாககூறப்பட்டு வரும் கர்த்தா தான் அது. இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் மீனா, இன்னொருவர் தியா.

பார்த்திபனின் மனைவியாக, வாய் பேச முடியாதவராக நடிக்கிறார் மீனா. இன்னொரு ஜோடியான தியா,திடீரென மண வாழ்க்கையில் புக் ஆகிப் போனதால் படத்திலிருந்து விலகுவதாக கூறினார்.

இதையடுத்து வேறு ஹீரோயினைப் பார்க்கப் புறப்பட்டது தயாரிப்பு தரப்பு. பார்த்திபனின் யோசனைப்படிசிம்ரனை அணுகினார்கள். அடடா வாராது வந்த மாணிக்கமே என்று சந்தோஷமாகிப் போன சிம்ரன், நடிக்கத்தயார் என்றார்.

அடடே, சூப்பரா இருக்கேப்பு என்று புளகாங்கிதமடைந்து போனது கர்த்தா யூனிட். அதுவரை எல்லாமேநல்லாதாதன் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சம்பளம் குறித்து பேச்சு வந்தபோதுதான் குழப்பமாகிப்போனதாம்.

சம்பளமாக 3 விரல்களை காட்டியுள்ளார் சிம்ரன். இது ரொம்ப சூப்பரா இருக்கே என்று குஷியாகிப் போனகர்த்தா தயாரிப்பாளர், 3 லட்சம் தான் உங்க சம்பளமா.. ரொம்ப சந்தோஷம் என்று கூறியுள்ளார்.

அவ்வளவுதான் கடுப்பாகி விட்டாராம் சிம்ரன். நான் கேட்டது 3 லட்சம் அல்ல, 30 லட்சம் என்று ஆக்ரோஷமாககூறவே, சூடான தோசைச் சட்டியில் சப்ஜாடாக உட்கார்ந்து விட்டதைப் போல பதறி எழுந்துள்ளார் கர்த்தாதயாரிப்பாளர். அதே வேகத்தில் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டாராம்.

சிம்ஸ் கொடுத்த ஷாக்கிலிருந்து விடுபட்டு இப்போது புலன் விசாரணை பாகம் 2 படத்தில் நடிக்கும் பிரியாவைபுக் பண்ணியுள்ளனராம். இந்த கேரக்டருக்கு கிளாமராக நடிக்கும் வகையில் கதையை பின்னியுள்ளனராம்.

பிரியாவும் கிளாமராக நடிக்க தயார் என செளஜன்யமாக கூறி விட்டாராம். இதனால் இயக்குனர், தயா>ப்பாளரைவிட பார்த்திதான் ஏக சந்தோஷத்தில் இருக்கிறாராம்.

விரைவில் படப்பிடிப்பை தொடங்கி கர்த்தாவை விரைவில் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்களாம் -எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல் படம் முடிந்தால்.

Read more about: simrans chance goes to priya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil