சர்ச்சையில் சிக்கி நூடுல்ஸ் ஆகியும் திருந்தாத பாடகர்
சென்னை: பிரபல பாடகரின் மகன் தங்கத்தின் பெயர் கொண்ட கவர்ச்சி நடிகையால் சர்ச்சையில் சிக்கி தத்தளித்தும் திருந்தவில்லை போன்று.
வம்பு தும்புக்கு போகாத பிரபல பாடகரின் மகன் தயாரிப்பாளராகவும், பாடகராகவும் உள்ளார். அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக காவல் நிலையம் வரை சென்றார் தங்கத்தின் பெயர் கொண்ட 2 எழுத்து கவர்ச்சி நடிகை. பின்னர் ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து நடிகைகளிடம் இருந்து தள்ளி இருந்த வாரிசு தற்போது மீண்டும் சேட்டையை காட்டுகிறாராம். தான் தயாரிக்கும் படங்களுக்கு பெங்களூர், மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைத்துள்ளாராம். தற்போது அவர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். வாரிசு பாடகரைப் பற்றி தெரியாமல் அந்த இளம் நடிகைகளும் அவருடன் கண்டநேரத்தில் எல்லாம் சுற்றுகிறார்களாம்.
இதை பார்த்த கோடம்பாக்கத்து நண்பர்கள் சிலர் அனைவரின் பார்வையும் உன் மீது உள்ளது, நடிகைகளுடன் சுற்றாதே என்று அறிவுரை கூற அவரோ அதை கண்டுகொள்ளவே இல்லையாம். இதே போன்று செய்தால் அவர் விரைவில் மீண்டும் சர்ச்சையில் சிக்குவார் என்று கோடம்பாகத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











