வாரிசு நடிகையை பற்றி வாய்விட்டு உளறியது வம்பா போச்சே.. அந்த பாடகிக்கு செக் வச்சிட்டாங்களாமே?

By Staff

சென்னை: சினிமாவில் செல்வாக்கு மிக்கவர்களுக்குத் தான் சப்போர்ட் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

சமீபத்தில் தனது வாய்ப்பு பறிபோன விஷயத்தை அழகாக கசிய விட்டு அந்த வாரிசு நடிகைக்கு ஆப்பு வைக்க நினைத்த பாடகிக்கு தற்போது ஆபத்து காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

சினிமா சீக்ரெட்களையும் வியாபார யுக்திகளையும் கெடுக்கும் இதுபோன்றவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்கிற மறைமுக அழுத்தம் கிளம்பி இருக்கிறதாம்.

பறிபோன வாய்ப்பு

பறிபோன வாய்ப்பு

தெலுங்கின் பிளாக்பஸ்டர் படம் வரை தனது குரல் ஃபேமஸ் ஆன நிலையில், தைரியமாக அந்த பிரச்சனையை கசிய விடலாம் என நினைத்து அந்த பாடகி செய்த செயல் தற்போது அவருக்கே வில்லங்கமாக மாறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு நடிகையை மட்டுமின்றி அந்த பெரிய இசையமைப்பாளரையும் அந்த பாடகி அசிங்கப்படுத்தியது பெரிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறது.

பெரிய இடம்

பெரிய இடம்

அந்த கிராமத்து பாடகிக்கு சமீப காலமாகத்தான் பெரிய படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்து வந்தது. இந்நிலையில், தேவையில்லாமல் பெரிய இடத்தை பகைத்துக் கொண்டது பெரும் குடைசல்களை கிளப்பும் என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர், சரண்டரே ஆகி விட்டாராம்.

பிளாக் லிஸ்ட்

பிளாக் லிஸ்ட்

சில முன்னணி நடிகைகளே சர்ச்சையை கிளப்பினால் அவர்களை பிளாக் லிஸ்ட் செய்து ஒதுக்கி விடுவார்கள், பிரபல நடிகர்களுக்கே ரெட் கார்டு கொடுத்து ஓரங்கட்டிய வரலாறு சமீபத்தில் சில நடந்த நிலையில், இந்த பாடகிக்கும் தற்போது அதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், மறைமுகமாக டாப் இசையமைப்பாளர்கள் பலர் அந்த பாடகியை ஓரங்கட்ட முடிவு எடுத்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கோடம்பாக்கத்தில் வலம் வருகின்றன.

பாடகி வேதனை

பாடகி வேதனை

உண்மையைத் தானே சொன்னோம், அதற்கு ஏன் இப்படி நம்மை டார்கெட் செய்து காலி செய்யப் பார்க்கின்றனர் என அந்த பாடகியும் ரொம்பவே வேதனை அடைந்து அந்த பிரச்சனை வெளியானதில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தான் அப்படி யாரிடமும் எதுவும் கூறவில்லை என்றும் மன்னிப்பு கேட்டு வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கணவருக்கும் சிக்கல்

கணவருக்கும் சிக்கல்

மனைவி செய்த வேலைக்கு கணவருக்கும் வேலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தேவையில்லாமல் அந்த விஷயத்தை கசியவிட்டது தங்களுக்கு இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை என இருவரும் புலம்பி வருகின்றனர். நெப்போடிசத்தின் கொடுமை என்னவென்பது இப்போது தான் புரிகிறது என கோடம்பாக்கத்திலும் புகையத் தொடங்கி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X