வீணை இசைக்கும் பெண்ணை தன் வசப்படுத்த நினைத்த இசையமைப்பாளர்.. பெரிய மனுஷன் பாக்குற வேலையா இது?

By Staff

சென்னை: பாடகி ஒருவரின் சமீபத்திய பேட்டி மொத்த கோலிவுட்டையும் கதி கலங்க வைத்துள்ளது. இசையமைப்பாளர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார், அப்போது நான் சின்னப் பெண், அதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கையில் இந்த விவகாரம் குறித்து பலரும் பேசுகையில் கடந்த காலங்களில் இசையமைப்பாளர்கள் பலரும் செய்த சேட்டைகளும் அத்துமீறல்களும் ஒவ்வொன்றாக பேசு பொருளாகி வருகிறது.

அதாவது பாடகி தான் பணியாற்றிய இசையமைப்பாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அப்போது தான் கத்தினாலும், சவுண்ட் ப்ரூஃப் அறையில் இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் கூறினார். மேலும் அந்த இசையமைப்பாளர் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று இருந்த போது அவர் எனது விட்டிற்கே வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இது மட்டும் இல்லாமல் அவர் என்னிடம் லட்சக் கணக்கில் வாங்கி செலவு செய்தார். ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கேட்ட போது, அத்துமீறி நடந்து கொண்டார், திருட்டுப் பட்டம் கட்டினார் என்று எல்லாம் கூறினார்.

Singer s Shocking Allegations Rock Kollywood Composer Misconduct Claims Spark Massive Controversy

சில்மிஷ இசையமைப்பாளர்கள்: இது தொடர்பாக திரையுலகத்திற்கு நெருக்கமான சிலர் கூறுகையில், நடிகர்கள் எப்படி நடிகைகளிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்களோ, அதேபோல் இசையமைப்பாளர்களும் பாடகிகளிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். இதனால் இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது. இசையமைப்பாளர்களுக்கும் தாங்கள் எதிர்பார்ப்பது கிடைக்கிறது, பாடகிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்கின்றனர்.

வீணை இசைக்கும் பெண்: ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளார் தன்னிடம் பணியாற்றிய வீணை இசைக்கும் பெண்ணை எப்படியாவது தன் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைத்தாராம். அதற்கான முயற்சிகளைச் செய்தார். ஆனால் கடைசியாக அந்த பெண் அவரிடம் இருந்து விலகி, ஒரு கப்பல் கேப்டனை மணந்து கொண்டு குடும்பம் நடத்த சென்றுவிட்டாராம். அதேபோல் மற்றொரு இசையமைப்பாளர் தன்னிடம் பணியாற்றிய ஒரு பெண்ணை, தன் வசப்படுத்த நினைத்து சில சில்மிஷ வேலைகளைச் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அது எல்லை மிறவே, அப்போது அவரது கையை பதம் பார்க்கும் வேலையை அந்த பெண்ணுக்கு வேண்டப்பட்டவர்கள் செய்தனராம். இப்படி இருக்கையில் பாடகி விஷயத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X