15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை
சென்னை: சிங் நடிகை விருது விழாவில் 15 நிமிடம் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்தாராம்.
கடந்த வாரம் ஹைதராபாத்தில் விருது விழா ஒன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவை புறக்கணிக்குமாறு சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டும் அவர் பேச்சை கேட்காமல் பலர் கலந்து கொண்டனர். ஏன் தலைவரின் காதலி கூட அந்த விழாவில் கலந்து கொண்டார்.

சிங்கத்துடன் நடிக்கும் சிங் நடிகையும் விருது விழாவில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். அம்மணி 15 நிமிடம் மேடையில் ஆட ரூ. 25 லட்சம் கேட்டாராம். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியவில்லையா என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டார்களாம்.
தெலுங்கு திரையுலகம் தவிர்த்து தற்போது தமிழ் திரையுலகிலும் அம்மணி முன்னணி நடிகையாகிவிட்டதால் அந்த தொகையை கேட்டிருப்பார் போல. ஆனால் அவர் கேட்ட தொகையால் பலரும் அதிர்ச்சி அடைந்ததுடன் அவரை பற்றி மோசமாக கமெண்ட் அடித்துள்ளனர்.
ஏதோ சிங் நடிகை லட்சங்களில் தான் கேட்டார், இதுவே பாலிவுட்டாக இருந்தால் நடிகைகள் கோடிகளில் கேட்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









