»   »  அவளை பற்றி பத்த வச்சும் பலனில்லையே பரட்டை: கவலையில் நடிகைகள்

அவளை பற்றி பத்த வச்சும் பலனில்லையே பரட்டை: கவலையில் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அவ ராசியில்லாதவ என சிங் நடிகையை பற்றி போட்டுக் கொடுத்தும் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவியத் துவங்கியுள்ளது தமிழ் நடிகைகளை கவலை அடைய வைத்துள்ளது.

டெல்லியை சேர்ந்த பஞ்சாபி பொண்ணான அந்த சிங் நடிகை தமிழில் 2 படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் பப்படமானதால் அம்மணி டோலிவுட் பக்கம் போனார்.

கிளாமராக நடிப்பேன் என்று அறிவித்த சிங் நடிகையை டோலிவுட் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து கொண்டாடியது. தெலுங்கு திரையுலகில் அவர் முன்னணி நடிகையானதை பார்த்த சண்டைக் கோழி அவரை தனது ஸ்பை படத்தின் ஹீரோயின் ஆக்கியுள்ளார்.

இந்நிலையில் சிங் நடிகையை கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்கவிடாமல் தடுக்க அவரை ராசியில்லாதவர் என தமிழ் நடிகைகள் இயக்குனர்களிடம் போட்டுக் கொடுத்துள்ளனர்.

நடிகைகள் போட்டுக் கொடுத்தும் பிரபல இயக்குனர் ஒருவர் பிரின்ஸ் நடிகரை வைத்து எடுக்கும் தனது படத்தில் சிங் நடிகையை ஹீரோயினாக்கிவிட்டார். இந்நிலையில் சிங் நடிகை கெட்டப்பை அடிக்கடி மாற்றும் நடிகரின் படத்திலும் ஒப்பந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.

நாம் அவ்வளவு போட்டுக் கொடுத்தும் எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லையே என சில நடிகைகள் கவலையில் உள்ளனர்.

English summary
Some Kollywood actress are reportedly sad after seeing Singh actress bagging more movie offers inspite of their tricks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil