அக்காவை போலவே கிளாமர் ரூட்டில் பயணிக்கும் தங்கை.. எவ்வளவு அத்துமீறியும் அது மட்டும் நடக்கலையே!

By Staff

சென்னை: ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான அக்காவை போலவே கிளாமர் போட்டோஷூட் நடத்தி தங்கையும் பிரபலமாக துடித்து வருகிறார்.

ஆனால், அக்கா நடிகை டிரெண்டானது போல தங்கை டிரெண்டாகவே இல்லாததால் மிகப்பெரிய அப்செட்டில் உள்ளாராம்.

மேலும், இளம் நடிகர்கள் கூட தன்னை படங்களில் ஒப்பந்தம் செய்ய யோசித்து வருவதால் தொடர்ந்து சோலோ குயினாகவே நடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளாராம் தங்கை நடிகை.

நடிகரின் வாரிசு

நடிகரின் வாரிசு

ஆறடியில் வாட்டசாட்டமாக இருக்கும் அந்த கால ஹீரோயின் வாரிசான இவர் தனக்கும் சினிமா மீது ஆர்வம் உள்ளது என்றும் தன்னையும் ஹீரோயினாக்குங்கள் என அப்பாவை டார்ச்சர் செய்ய அவரும் வேறு வழியில்லாமல் சூப்பர் ஹிட் ரீமேக் படத்தின் மூலம் மகளை ஹீரோயினாக்கினார்.

ஆரம்பமே அவுட்

ஆரம்பமே அவுட்

ஒரு படத்தை தவிர வேறு எந்த ஹிட்டையும் கொடுக்காத அந்த இயக்குநர் மட்டுமே அப்பா நடிகரின் பேச்சை தட்ட முடியாமல் ரீமேக் படத்தை வாரிசு நடிகையை வைத்து இயக்கினார். மற்ற மொழிகளில் பாராட்டுக்களை குவித்த அந்த படம் இங்கே வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்கிற நிலையில் ஆரம்பமே அவுட் ஆகி விட்டது.

நோ சொல்லும் ஹீரோக்கள்

நோ சொல்லும் ஹீரோக்கள்

வாரிசு நடிகையாக இருந்தாலும் நடிகைக்கு சுத்தமாக நடிப்பு வராததை அறிந்து கொண்ட பல இளம் ஹீரோக்களும் ஆள விடும்மா என தங்களது படங்களில் அவரை ஹீரோயினாக தேர்வு செய்வதை தவிர்த்து வருகின்றனர். அதனால் தொடர்ந்து சோலோ குயினாக நடிக்கும் முயற்சியை வேறு வழி இல்லாமல் செய்து வருகிறார்.

பிரபலமான அக்கா

பிரபலமான அக்கா

கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியே சமூக வலைதளத்தில் பிரபலமான அக்கா நடிகைக்கு ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மீண்டும் சினிமாவிலும் நல்ல பிரகாசமான எதிர்காலம் உருவாகி இருக்கிறது. இதனை அறிந்து கொண்ட தங்கை அக்காவை போலவே தானும் பிரபலமாக முயற்சித்து வருகிறார்.

ஏகபோக கவர்ச்சி

ஏகபோக கவர்ச்சி

அக்காவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு கடற்கரைகளில் இடையழகுக்கு மேல் காட்டியபடி வித விதமாக கவர்ச்சி போட்டோக்களை நடத்தி இணையத்தை கலங்கடித்து விடலாம் என தங்கை நடிகை நினைத்து போட்டோஷூட் நடத்தினாலும் அவர் நினைத்தது நிறைவேறவில்லை என்பதால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார்.

எல்லாமே வேஸ்ட்

எல்லாமே வேஸ்ட்

திறமையான நடிப்பு இருந்தால் மட்டுமே திரையுலகில் சாதிக்க முடியும் என்பதை சில நடிகைகள் புரிந்து கொள்ளாமல் கிளாமர் போட்டோஷூட்களையும் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை நம்பியும் இப்படி கவர்ச்சி கடலில் குதித்தால் திரைக்கடலில் கரை சேராமல் மூழ்கி போகும் அபாயம் உள்ளதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினாலும் நான் மட்டும் ஏன் டிரெண்டாகவே மாட்டேங்கிறேன் என அக்காவிடமே புலம்பி புது ஐடியாவையும் கேட்டுள்ளாராம் அந்த வாரிசு நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X