இந்த சின்ன ரோலுக்காக அவசரப்பட்டு அந்த பெரிய படத்தை விட்டுட்டோமா.. குழப்பத்தில் குச்சி ஹீரோயின்!
சென்னை: பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் உச்ச நடிகரின் படத்தில் கிடைத்த சின்ன ரோலுக்காக அந்த வாய்ப்பை மறுத்த அந்த குச்சி ஹீரோயின் தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம்.
கோலிவுட்டில் குல்பி ஹீரோயினாக வந்து விருது வாங்கும் ஆசையில் இப்போ குச்சி ஹீரோயினாக மாறியுள்ள அந்த பிரபல நடிகை தனது முடிவு சரி தானா என்ற குழப்பத்தில் புலம்பி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மசாலா படம்
உச்ச நடிகரின் மசாலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனடியாக ஓகே சொன்ன அந்த குச்சி நடிகை தற்போது, தனக்கான ரோல் ரொம்ப சின்னது என்ற ஃபீலிங்கில் இருக்கிறாராம்.

தவறவிட்ட வாய்ப்பு
வெளி மாநிலங்களில் நடிப்பில் கலக்கி வரும் அந்த குச்சி நடிகைக்கு, உச்ச இயக்குநரின் பெரிய படத்தில் நடிக்க அழைப்பு வந்தும், அதனை ஏற்க மறுத்துள்ளார். அவர் இயக்கத்தில் நடிக்க பலரும் பல காலம் தவம் கிடந்து வரும் நிலையில், அசால்ட்டாக அந்த வாய்ப்பை குச்சி நடிகை தவறவிட்டுள்ளார்.

இப்போ புலம்பி
பெரிய படத்தின் பட்ஜெட் மற்றும் அந்த படத்தின் பில்டப் செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவர வெளிவர அம்மணிக்கு அடடா, தப்பான முடிவை எடுத்துவிட்டோமே என இப்போது புலம்பி வருகிறாராம்.

அவரை மாதிரி ஆகிடுவிங்க
இதற்கு முன்னாலும், படத்திற்காக உடலை வீங்கவைத்து நடித்த அந்த நடிகை அதற்கடுத்து பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் ஓரங்கட்டப்பட்டார். அதே போல, நீங்களும் ஆகிடுவிங்க, கொஞ்சம் பார்த்து ரிஸ்க் எடுங்க என்றும் அவரை பார்க்கும் பல பிரபலங்கள் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்து வருகிறார்களாம்.

பார்த்துக் கொள்ளலாம்
யார் என்ன சொன்னாலும், தனது ரூட்டை மாற்றப் போவது இல்லை என்றும், தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே செய்யப் போவதாகவும் அந்த குச்சி நடிகை முடிவெடுத்துள்ளாராம். அடுத்து என்ன என்ன அதிரடிகளை அந்த பிரபல நடிகை எடுக்கப் போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











