»   »  'இவருக்கு இதே வேலையாப் போச்சு'... ஒல்லி மீது எரிந்து விழும் இசை!

'இவருக்கு இதே வேலையாப் போச்சு'... ஒல்லி மீது எரிந்து விழும் இசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் இசை நடிகருக்கும் ஒல்லி நடிகருக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்வதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறி அதில் வெற்றியும் கண்டவர் அந்த இசையமைப்பாளர். தற்போது முன்னணி ஹீரோக்களை விட அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இசையுடன் முன்னணி நடிகைகளை ஜோடி சேர விடாமல் அந்த ஒல்லி நடிகர் தடுத்து வருவதாக இசையமைப்பாளர் ஆதங்கப்படுகிறாராம்.

முன்னர் நயனமான நடிகை இசையுடன் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொள்ளவிருந்த நேரத்தில் இடையில் புகுந்த ஒல்லி நடிகையின் மனதை மாற்றி விட்டாராம்.

முதல்முறை என்பதால் இசை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டாராம். ஆனால் தொடர்ந்து ஒல்லி நடிகர் இசையுடன் ஜோடி சேரவிருக்கும் முன்னணி நடிகைகளை தடுத்து வருவதால் இசையின் கோபம் தற்போது உச்சத்துக்கு சென்றிருக்கிறதாம்.

இதனால் இசைக்கும், ஒல்லிக்கும் இடையே இதுவரை நடந்து வந்த பனிப்போர் தற்போது மோதல் நிலைக்கு சென்றுள்ளதாம். விரைவில் இது வெளிப்படையான மோதலாக மாறினாலும் ஆச்சரியமில்லை என்று கூறுகின்றனர்.

English summary
Sources Said Clashes between the Skinny Actor and Young Musical actor Increasing Day by Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil