எங்க ரெண்டு பேருக்கு நடுவுல சண்டையை மூட்டி விடுறதே அவங்கதான்.. போட்டுடைத்த பிரபல நடிகை!
சென்னை: சின்ன நம்பர் நடிகையின் படம் ஒண்ணு சீக்கிரமே ரிலீஸ் ஆகுது. படத்தோட விளம்பர நிகழ்ச்சிக்கு வரலைன்னு, தயாரிப்பு தரப்பு கண்டிச்ச உடனே, சில விளம்பர நிகழ்ச்சிக்கு மட்டும் அந்த நடிகை தலையை காட்டி உள்ளார்.
படத்துக்கான புரொமோஷன் தொடர்பான பேட்டியில், அந்த சின்ன நம்பர் நடிகையிடம், உங்களுக்கும், அந்த பெரிய நம்பர் நடிகைக்கும் என்ன தாங்க பிரச்சனை என தொகுப்பாளர் கேட்க, எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம் என விவரமா கூறியுள்ளார்.

எதுக்கு விளம்பரம்?
எப்படியும் அந்த படம் ரிலீஸ் ஆனாலும், ஓட போறது இல்லை, என்பதை அறிந்து கொண்ட அந்த சின்ன நம்பர் நடிகை, தனக்கு கிடைச்சிருக்கும் பல புதிய படங்களின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால், அந்த படத்தை ரிலீஸ் செய்ய போராடி கொண்டிருக்கும் தயாரிப்பு தரப்பு, புரொமோஷனுக்கு நடிகையை அழைத்துள்ளது.

நான் ரொம்ப பிசி
நீங்கதான லீடு ரோலில் நடிச்சிருக்கீங்க, நீங்களே உங்க படத்துக்கான புரொமோஷனுக்கு வரலைன்னா நல்லாவா இருக்கும். வந்து எப்படியாவது, படத்தை ஓட்ட கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என தயாரிப்பு தரப்பு கெஞ்சாத குறையாக கோரிக்கை வைக்க, அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்லை, நான் ரொம்ப பிசி எனக் கூறினாராம்.

வச்சு விளாசல்
இதனால், கோபம் அடைந்த தயாரிப்பு தரப்பு, அப்படியானால், பாதி சம்பளத்தை திருப்பி கொடுங்க, என கழுத்து மேல கத்தி வச்சது போல கேட்டு விளாச, விஷயம் தலைக்கு மேல போயிடுச்சு, இப்போ என்ன பண்றது என யோசித்த அந்த நடிகை, சில புரொமோஷன் பேட்டிகளில் தலையை காட்ட சம்மதித்துள்ளார்.

உங்களுக்கும் அவங்களுக்கும்
ஹீரோக்களை போல, ஹீரோயின்கள் கிளாஷும் இருந்தால் தான் படம் ஓடும், அதனால ரசிகர்கள் சண்டையை பிரபல நடிகர்களும் கண்டு கொள்வதில்லை. அப்படியே அவங்கள வச்சி இருந்தா தான் நாம பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் எண்ண முடியும், அதே போல செட் பண்ணப் பட்ட பிரச்சனை தாங்க எங்க பிரச்சனையும் என அசால்ட்டா போட்டுடைத்துள்ளார்.

நாங்க நண்பர்கள்
இதற்கு முன்னதாக லீடிங்கில் இருந்த அந்த கம் நடிகைக்கும், எனக்கும் கிளாஷ் என கிளப்பி விட்டனர். அதன் பிறகு, அந்த பெரிய நம்பர் நடிகையுடன் மோதல் என கிளப்பி விட்டனர். உண்மையாவே நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வோம் எல்லாம், இந்த மீடியாக்கள் செய்யும் வேலை தான் என்றும் கூறி பேட்டி கேட்டவருக்கே பதிலடி கொடுத்துள்ளார்.

அவங்களை ஏன் கேட்கலை
சினிமா புரொமோஷனுக்கு, அந்த டாப் நடிகர் மற்றும் அந்த நம்பர் நடிகை மட்டும் வருவதில்லையே; அவங்களை எல்லாம் கேட்காம உங்களை மட்டும் ஏன் இப்படி கழுத்து மேல கத்தி வச்சது போல வம்படியாக கேட்டு தொல்லை செய்கின்றனர் என்ற கேள்விக்கு, மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











