»   »  திருமண அறிவிப்பால் 'ஒல்லி' படத்திலிருந்து விலகிய நடிகை?

திருமண அறிவிப்பால் 'ஒல்லி' படத்திலிருந்து விலகிய நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு நடிகருடனான காதல் கைகூடியதால் ஹிட் இயக்குநர் படத்திலிருந்து நடிகை விலகி விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை தான் என்றாலும் தாய்மொழி நடிகைக்கு கைகொடுக்கவில்லை. எனினும் அடுத்த தேசம் அவருக்குக் கைகொடுத்து கரையேற்றியது.

அங்கு முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை தமிழிலும் தற்போது வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். புத்த நடிகருடனான காதல் முறிவிற்குப் பின் சோகத்தில் இருந்த நடிகைக்கு, தற்போது வாரிசு நடிகரின் குடும்பத்துக்கு மருமகளாகும் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது.

'நீயில்லாமல் நானில்லை நானில்லாமல் நீயில்லை' என்று இருவரும் நெருக்கமாக சுற்றியதைப் பார்த்த குடும்பத்தினர், விரைவில் இருவருக்கும் கால்கட்டு போட தீர்மானித்து விட்டனர்.

இதனால் ஒல்லி நடிகர்-ஹிட் இயக்குநரின் புதிய படத்திலிருந்து நடிகை விலகிக் கொண்டதாகக் கூறுகின்றனர். காரணம் என்னவென்று விசாரித்தால் திருமணதிற்குப் பின் நடிகை சினிமாவிற்கு முழுக்குப் போடுகிறாராம்.

அதனால் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்று முன்னதாகவே யோசித்து விலகி விட்டதாகக் கூறுகின்றனர்.

நல்ல முடிவுதான்!

English summary
Sources said Smart Actress Receding Hit Director Upcoming Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil