வற்புறுத்தி திருமணம் செய்த தயாரிப்பாளர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை!

By Staff

சென்னை: தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அந்த சிரிப்பழகி நடிகை. தனது சிறப்பான நடிப்பை பல படங்களில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்த இவரின் வாழ்க்கை சோகமும் கண்ணீரும் நிறைந்ததாகவே உள்ளது.

கறுப்பு வெள்ளை காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்தவர் தான் அந்த அழகு நடிகை. இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததால், ஆரம்ப நாட்களில் நாடகக் குழுக்களில் சில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். நாடகத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Smile Queen actress unhappy marriage life story

முதல் படமே வெற்றி: தமிழில் இவர் முதன் முதலாக காதல் மன்னன் நடிகருடன் சேர்ந்து நடித்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல விளம்பர படங்களிலும் நடித்து இருக்கிறார். இவரின் அழகான சிரிப்பால் மயங்கிய பேன்ஸ், அவருக்கு சிரிப்பின் அரசி என பெயர் வைத்து அழகு பார்த்தனர்.

மூன்றாவது திருமணம்: இப்படி அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த சிரிப்பழகி நடிகையை, தயாரிப்பாளர் ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்தார்கள். இதில் முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இருந்த நிலையில், அழகு நடிகையின் குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி மூன்றாவதாக அவரை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார்.

குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை: தன்னைவிட பல வயது மூத்த தயாரிப்பாளரை முறைப்படி திருமணம் செய்து கொண்ட போதும், மூன்றாவது மனைவி நான் தான் என்று அவர் சொன்ன போதும், தயாரிப்பாளரின் குடும்பத்தில் சிரிப்பழகி நடிகையை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரை தவறான பெயரை வைத்துத்தான் அழைத்து வந்தனர். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாத அந்த அழகு நடிகை, தயாரிப்பாளர் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதோடு மட்டுமில்லாமல் குழந்தையை பெற்ற பிறகும் முன்பு இருந்ததைவிட அதிகமான படங்களில் நடித்தார். எவ்வளவு தான் புகழின் உச்சியில் இருந்து பெரிய நடிகையாக வலம் வந்த போதிலும் தயாரிப்பாளரின் குடும்பத்தில் இவருக்கு தவறான பெயர் மட்டுமே இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X