For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தகராறு.. அப்போ அந்த பெரிய பாம்பு படமெடுக்காதா?

  By Staff
  |

  சென்னை: பெரிய பாம்பு டைட்டிலில் எடுக்கப்பட்டு வந்த அந்த படம் கிடப்பில் போடப்பட்டதுக்கு பின்னாடி இப்படியொரு பெரிய கதையே இருக்காம்.

  சினிமா என்றாலே சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். கோடிக் கணக்கில் காசு கொட்டும் இடம் என்பதால் பல தடைகளும் தடங்கல்களும் வரத்தான் செய்யும்.

  ராஜு பாய் 'அஞ்சான்' 7 ஆண்டு நிறைவு… இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்!ராஜு பாய் 'அஞ்சான்' 7 ஆண்டு நிறைவு… இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்!

  ஆனால், அந்த நடிகரின் படங்களுக்கு ஏன் இப்படி வரிசைக் கட்டி பிரச்சனைக்கு மேல பிரச்சனையா வந்து குவியுதேன்னு ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

  பாம்பு படம்

  பாம்பு படம்

  பாம்பு டைட்டில் கொண்டு உருவான அந்த பெரிய படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது. கெட்டப் நடிகர் நடிப்பில் ஏகப்பட்ட கெட்டப்புகளுடன் உருவாகி வந்த அந்த படம் இன்னமும் ஷூட்டிங்கே முடியாமல் இழுத்துக் கொண்டே கிடக்கிறது. இதற்கு பின்னால் மிகப்பெரிய பிரச்சனை உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  மோதல்

  மோதல்

  பல கோடி போட்டு தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும், மூளையை மூலதனமாகக் கொண்டு இயக்கும் திறமையான இயக்குநருக்கும் எப்போதும் சண்டையும் சர்ச்சையும் வருவது சினிமா உலகில் சாதாரணமான விஷயம் தான். ஆனால், சின்ன சின்ன சண்டைகளுடன் நிற்காமல் பெரிய விரிசல் விழுந்து விட்டால், அந்த படம் கடைசி வரை திரையை காணாமலே காலாவதியான கதைகளும் இங்கே ஏராளம் உண்டு.

  கெட்டப் நடிகர்

  கெட்டப் நடிகர்

  இன்னமும் பள்ளிகளில் ஃபேன்ஸி டிரெஸ் காம்பெடிஷனுக்கு போவது போல எந்த கெட்டப்பை போட சொன்னாலும் போட்டுக் கொண்டு வித விதமாக வந்து நடித்துக் கொண்டிருக்கும் கெட்டப் நடிகருக்கு இந்த படத்திலும் பல்வேறு கெட்டப்புகளை அள்ளி வீசி இயக்குநர் ஹாலிவுட் லெவலில் படம் எடுக்கிறேன் என கிளம்பினார்.

  என்ன பிரச்சனை

  என்ன பிரச்சனை

  ஏற்கனவே எடுத்த சிறு பட்ஜெட் படங்களில் நல்ல வெற்றியை பார்த்த அந்த இயக்குநரிடம் பெரு முதலீட்டு படத்தை தயாரிப்பாளர் ஒப்படைத்து இருந்தார். ஆனால், எப்போதுமே இயக்குநர்கள் செய்வது போல சொல்றதை விட அதிக செலவுக்கு கொண்டு சென்று விடுவது போல இந்த படத்துக்கும் வெளிநாடு ஷூட்டிங், சிஜி, மேக்கப் என கஜானாவை காலியாக்க தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் முட்டிக் கொண்டதாம்.

  வைரஸ் பார்த்த வேலை

  வைரஸ் பார்த்த வேலை

  திட்டமிட்டபடியே படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நிலையில், உலகையே ஆட்டி படைத்த அந்த கொரோனா வைரஸ் பார்த்த வேலையும் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு ஒரு காரணம் என்கின்றனர். பெரிய பொருட்செலவு செய்து ஷூட்டிங் நடத்த முடியாமல் பல லட்சங்களை அது விழுங்கி விட்டதாம்.

  லேட்டாகும்

  லேட்டாகும்

  கெட்டப் நடிகரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாகி விட்ட நிலையில், தயாரிப்பாளரும் இயக்குநரும் பேசிக் கொள்ளாத நிலையில் தான் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ள நிலையில், சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தி ஈகோவை தூக்கி எறிந்து விட்டு படத்தை முடிக்கிற வேலையை பாருங்க என சினிமா பிரபலங்களும் படத்தை முடிக்க நடத்திய பேச்சுவார்த்தைகளும் ஒன்றும் சரியாக அமையவில்லையாம்.

  சைடு கேப்பில்

  சைடு கேப்பில்

  தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாத நிலையில், நடிகரின் அடுத்த படத்தை எடுத்தே முடித்து இருக்கிறார் அந்த தயாரிப்பாளர். ஆனால், முதலில் ஆரம்பிக்கப்பட்ட அந்த பாம்பு படம் தான் எப்போது படமெடுக்கும் என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது.

  தொடரும் பிரச்சனை

  தொடரும் பிரச்சனை

  கெட்டப் நடிகர் நடிப்பில் உருவாகி வரும் படங்களுக்கு இதே போன்ற பிரச்சனைகள் தொடர்வது வாடிக்கையாகி வருகிறது. நடிகரும் எந்தவொரு பிரச்சனையையும் தீர்த்து வைக்க முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்த பட அட்வான்ஸை வாங்கிக் கொள்வதிலேயே குறியாக செயல்பட்டு வருவதாகவும் இயக்குநர்கள் புலம்பி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  நல்லது அல்ல

  நல்லது அல்ல

  இதே போல ஒவ்வொரு படமும் கடைசி கட்டத்தில் நின்று போனால் அந்த நடிகரின் உழைப்பு தான் வீணாகும் என்றும் அது அவரது எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு நல்லது அல்ல என்றும் நலம் விரும்பிகளும் எடுத்துக் கூறி வருகின்றனராம். ஆனால், தனது வாரிசுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில் மட்டுமே அந்த நடிகர் அக்கறை செலுத்தி வருவதாகவும் நடிகர் மீது சிலர் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றனர்.

  டைட்டில் கசிவு

  டைட்டில் கசிவு

  நடிகர் மீது அதிருப்தி கொண்ட சிலர் தான் அவரது அடுத்த படத்தின் டைட்டிலையும் இணையத்தில் கசியவிட்டு இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சுக்களாக அடிபட்டு வருகின்றன. தொடர்ந்து இதே போக்கு நீடித்தால் படக் காட்சிகளும் வெளியே கசியவும் நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றனர்.

  உஷாராக வேண்டும்

  உஷாராக வேண்டும்

  சீக்கிரமே தன் கழுத்தை சுற்றி இருக்கும் பாம்பை கழற்றி விட்டு தனது படங்களை வெளியிட்டு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் கெட்டப் நடிகர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவரது நலம் விரும்பிகள் தெரிவித்து வருகின்றனர்.

  அங்கே பிரச்சனை இல்லை

  அங்கே பிரச்சனை இல்லை

  மேலும், கெட்டப் நடிகர் நடித்து வரும் வரலாற்று படத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இதுவரை சென்று வருவதாகவும், நடிகருக்கு குறைந்த அளவிலான காட்சிகள் மட்டுமே என்பதால், அடுத்தடுத்த படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இன்னொரு பிரம்மாண்ட படமும் நடிகரை வைத்து ஆரம்பித்து அப்படியே நின்று போனதால், கெட்டப் நடிகர் படத்தின் ரசிகர்கள் சீக்கிரமே அவரது அடுத்த படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  English summary
  Oral war between Director and Producer lands big trouble for getup actor’s mega budget Snake titled movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X