"கிசு கிசு" கார்னர்
நப்பாசை நமுத்துப் போன கடுப்பில் ஆளுக்கொரு ஆசை படத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ்.
சிவக்குமார் ரொம்ப காலத்திற்கு ஹீரோவாக நடித்தது போல இப்போது நடித்து வருபவர் சத்யராஜ்.
தலையில் முடிகள் போய் பலகாலமாகியும் கூட இன்னும் விக் வைத்துக் கொண்டு, 25 வயதுக்காரர் போல சின்னப் பொண்ணுங்களோட ஆடிப் பாடி வரும் சத்யராஜ்
தற்போது வி.சேகரின் இயக்கத்தில் ஆளுக்கொரு ஆசை படத்தில் நடித்து வருகிறார்.இதில் இவருக்கு ஜோடியாக வருபவர் மீனா.
ஆனால் முதலில் தனக்கு ஜோடியாக சினேகாவைப் போடுமாறு சேகரைநச்சரித்துள்ளார் சத்யராஜ். சேகரும், சினேகாவை நாடியுள்ளார்.
ஆனால் தலையை வடக்கும், தெற்குமாக ஆட்டி முடியாது என்று கூறிவிட்டாராம் சினேகா.
சேகர் அந்தப் பக்கமாக நகர்ந்தவுடன், அவரு பையன் கூட நடிக்கவே பயமா இருக்கு,
இதில் இவர்கூட ஜோடி சேர்ந்தாஅவ்வளவுதான் என்று காமென்ட் அடித்தாராம் சினேகா.
வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக மீனாவுடன் ஆடிப் பாடியுள்ளாராம் சத்யராஜ்.
ரொம்பத்தான் லொள்ளு!


Click it and Unblock the Notifications