»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

"எழிலை" எடுப்பாக்க ஸ்னேகா சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளாராம்.

ஸ்னேகாவிடம் பல பிளஸ் பாயிண்டுகள் உண்டு. லாலிபாப் முகம், அதே நேரத்தில் வாலிப்பான தேகம். கூடவே கொள்ளையடிக்கும் சிரிப்பு. எல்லாம் சேர்ந்த இந்த அழகிய ராட்சசிக்கு சமீப காலமாக சின்னக் கவலை.

நீங்கள் பயப்படுவது போல ஒன்றுமில்லை, கொஞ்சம் உடம் போட்டுவிட்டதாக ஸ்னேகாவுக்குள் வருத்தம்.

இடுப்பைச் சுற்றி டயர்கள் உருவாவதற்கான ஆரம்ப அறிகுறியும், ஜோதிகா- கிரண் போன்றவர்களுக்கு போட்டியான தொப்பையும் வைக்க ஆரம்பித்துவிட்டதால், உடனே உடலை ஸ்லிம்மாக்குமாறு ஸ்னேகாவுக்கு ஸ்னேகமானவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களாம்.

ஒரு காலத்தில் கே.ஆர்.விஜயாக்கள் போன்ற மெகா சைஸ் மாமிகள் ஆட்சி நடத்திய தமிழ் சினிமாவில் சிம்ரனின் வரவுக்குப் பின் சிக் உருவங்களுக்கு தனி மவுசு வந்துவிட்டது.

ஸ்னேகாவுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?. சமீபத்தில் ஆயுதம் படத்தில் தனது தொப்பை தன்னை விட்டுவிட்டு பிரஷாந்துடன் தனியே டான்ஸ் ஆடியதைப் பார்த்து வெறுத்துப் போய்விட்டாராம் ஸ்னேகா.

சரவண சுப்பையா இயக்கத்தில் ஏபிசிடி என்ற படத்திலும் ஸ்னேகா நடிக்கிறார். இதில் ஸ்னேகா தவிர அபர்ணா, நந்தனா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இருவரும் ஸ்னேகாவைவிட ரொம்பவே வயது குறைந்தவர்கள்.

ஆனாலும் அவர்களைத் தூக்கி அடிக்கும் வகையில் தனது தோற்றம் இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஸ்னேகா. இதனால் தொப்பைக்கு குட்பை சொல்ல நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிரட் மில்லில் நேரத்தை செலவிடுகிறார்,

கூடவே நடிகைகளுக்கே உரிய சில இத்யாதி சமாச்சாரங்களுக்கும் "பில்ட்-அப்" கொடுக்க முடிவு செய்ள்ளாராம். இதற்காக சில சமாச்சாரங்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துள்ளார் என்கின்றன கோடம்பாக்கம் குருவிகள்.

அந்த "சமாச்சாரங்களுடன்" ஏபிசிடி மற்றும் அர்ஜூனுடன் சின்னா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் முலம் தனக்கும் "எடுப்பான" நாயகிகளின் வரிசையில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் ஸ்னேகா.

இதுவரை அடக்கமமாய், புன்னகையுமாக வந்து கொண்டிருந்த ஸ்னேகா இனி வரும் படங்களில் கவர்ச்சி அவதாரம் எடுக்கவும் முடிவு செய்துவிட்டார்.இல்லாவிட்டால் மும்பை, தெலுங்கு வரவுகள் தன்னை ரொம்ப சீக்கிரத்திலேயே கல்யாணம் குட்டி என்று வாழ்க்கையில் செட்டிலாக்கிவிடுவார்கள் என்று கருதுகிறார் ஸ்னேகா.

Read more about: actress, bipasa, cinema, film, kamal, ramya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil