"கிசு கிசு" கார்னர்
அஜீத்தின் அடுத்த படமான ஜனா ஆக்ஷன் படமாகவே உருவாகி வருகிறது.
மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப்படத்தில் முதலில் ஆக்ஷன் இல்லை. ஆனால், அஜீத் வற்புறுத்தியதால் இப்போது சேர்த்துவிட்டார்களாம்.
கையில் படங்கள் ஏதும் இல்லாததால் அதிரடி கவர்ச்சிக்குத் தாவிவிட்டார் ஆஷிமா.
ரமணாவில் பொட்டிப் பாம்பாய் நடித்த அவர் கையில்இப்போது அலாவுதீன் படம் மட்டும் தான்.
இதனால் உடை குறைப்புக்குத் தயார் என்று தயாரிப்பாளர்களுக்கு ஓலை அனுப்பி வருகிறார்.
தன் மீது அடிக்கடி கிசுகிசுக்கள் வருவதால் நொந்து போய் இருக்கிறார் சினேகா. இப்போதெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் கூட யாருடனும்அவர் பேசுவதில்லை.
கேட்டால், நான் யாருடன் பேசினாலும் சேர்த்து வைத்து ஏதையாவது எழுதிவிடுகின்றனர். இதனால் தான் இந்தஅமைதி என்கிறார். சத்தம் போடாமல் ஒரு வேலையையும் செய்துள்ளார்.
தன்னைப் பற்றிய கிசுகிசுக்களைப் பரப்பியதே தனது பி.ஆர்.ஓ.தான் என்பதை சிலர் மூலம் அறிந்த சினேகா அவரைத் தூக்கிவிட்டார். இனி அவரது கால்ஷீட் உள்ளிட்ட விவகாரங்களைக் கவனிக்கப்போவது அவரது அம்மா தானாம்.
மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் ராதிகா செளத்ரி. படங்கள் இல்லாததால் மும்பைக்குப் பெட்டியைக் கட்டிய இவர்இப்போது மீண்டும் சென்னை வந்துள்ளார்.
சான்ஸ் கேட்டு தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் நேரில் சந்தித்து வருகிறார். ஒருடான்ஸ் என்றாலும் போதும் என்கிறார்.


Click it and Unblock the Notifications











