»   »  "ஸ்லிம் ஆகிறார் சினேகா!

"ஸ்லிம் ஆகிறார் சினேகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோதிகாவுக்குப் போட்டியாக தொப்பை உப்பி வருவதாக வந்த புகாரையடுத்து உடலை "ஸ்லிம் ஆக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டாராம் சினேகா.

புன்னகை இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகா, சமீப காலமாக கவர்ச்சி கலக்கல் ராணியாகவும் மாறி வருகிறார்.

மும்பை இளசுகளுக்கும், கேரளத்து ரவுசுகளுக்கும் போட்டியாக தன்னாலும் கவர்ச்சி காட்ட முடியும் என்ற எண்ணத்தில்படத்துக்குப் படம் கவர்ச்சியில் புகுந்து விளையாட முடிவு செய்து விட்ட சினேகா, சின்னாவில் ஏகப்பட்ட "சீன் காட்டி கவர்ச்சியில்கலக்கியுள்ளாராம்.

சின்னா படத்தில் அர்ஜுனுடன் கடற்கரையில் உருண்டு புரண்டதை பார்க்க அப்பகுதியில் பெரும் கூட்டமே கூடிவிட்டதாம்.சினேகாவின் இந்த கவர்ச்சி துள்ளாட்டம் தான் கோடம்பாக்கத்தின் இப்போதய ஹாட் டாபிக்.

கவர்ச்சி காட்ட முடிவு செய்து விட்ட சினேகாவுக்கு சில சிக்கல்களும் கூடவே எழுந்துள்ளது. அதில் முதல் சிக்கல் அவரது தொப்பை. ஜோதிகாவைப் போல தனக்கும் சின்னத் தொப்பை அழகாக இருப்பதாக முதலில் பெருமைப்பட்டார் சினேகா.

ஆனால் தொப்பை நாளுக்கு நாள் உப்பத் தொடங்கியதால், பயந்து போன அவர் அதை எப்படி குறைப்பது என்று கண்ணில்படுகிறவர்களிடம் எல்லாம் அட்வைஸ் கேட்டார். சில முக்கிய புள்ளிகளின் அறிவுரையால் தொப்பையை முயற்சியில் சினேகாஇப்போது தீவிரமாக இறங்கி விட்டார்.

டீ, காப்பி, தயிர், அரிசி சாதம், நொறுக்குத் தீனி ஆகியவற்றை அறவே தவிர்க்கத் தொடங்கியுள்ளாராம் சினேகா. அதேபோல சமயம் கிடைக்கும் போது பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுவார். இதற்கும் "பைசொல்லி விட்டார்.

ஸ்லிம் ஆகும் முயற்சியில் சினேகா தீவிரமாக இறங்கியுள்ளதற்கு தமிழ்ப் படங்கள் மட்டும் தான் காரணம் என்று நினைத்துவிடாதீர்கள். தெலுங்கும் தான் முக்கிய காரணம். தமிழை விட தெலுங்கில் பல மடங்கு கவர்ச்சி அதிகம் காட்டவேண்டியிருப்பதால் உடம்பை அழகாக்கியே ஆக வேண்டிய கட்டாயம் சினேகாவுக்கு.

சினேகா ஸ்லிம் ஆனால் அவருக்கு மட்டுமா நல்லாருக்கும். நமக்கும் தான் பார்க்க நல்லாருக்கும். ஆகட்டும், ஆகட்டும்!

Read more about: slim beauty sneha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil