»   »  புன்னகை நடிகையின் பின்னணி சோகம்!

புன்னகை நடிகையின் பின்னணி சோகம்!

Subscribe to Oneindia Tamil

ஓருயிர், ஈருடலாக இருந்து வந்த புன்னகை இளவரசி நடிகையும், அவரது காதலராக கருதப்பட்டு வந்த ஸ்ரீ நடிகரும் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு "விவகாரமான" இரண்டு காரணங்கள்கோலிவுட்டில் உலா வருகிறது.

பூமிகாவுடன் முன்பு கிசுகிசுக்கப்பட்ட ஸ்ரீ, பின்னர் புன்னகையுடன் சேர்த்து பலமாக பேசப்பட்டார். இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வரத் தொடங்கியபோதும், இருவரும் அதை வலுவாக மறுக்கவில்லை. இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டால், கேட்டு விட்டார்களேஎன்பதற்காக, அதெல்லாம் இல்லை என்று சும்மாச்சுக்கும் ஒரு பதிலைக் கூறி விட்டு சென்றார்கள்.

ஆனால் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மிக ரகசியமாக தங்களது காதலை இருவரும் வளர்த்து வந்தனர். இருவரும் சேர்ந்து கிழக்குக் கடற்கரைச்சாலையில், கடலோரத்தில் சில ஏக்கர் நிலத்தை அருகருகே வாங்கிப் போட்டனர்.

நேரில் பேசுவதை விட செல்போனில் கடலை வறுத்து வந்தனர். இப்படியாக மிக ஸ்மூத்தாக இவர்களது காதல் போய்க் கொண்டிருந்தபோதுதான் இரண்டுவிவகாரங்கள் இருவருக்கும் இடையே குறுக்கே வந்து காதலில் விரிசலை ஏற்படுத்தியதாம்.


படங்களில் பிசியாக இருந்தபோதும் அதிகமான விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கினார் புன்னகை. இதிலும் நல்ல வசூல் இருந்ததால், விளம்பரப் படங்களுக்கும்முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். தமிழகத் தலைநகரில், மிகவும் ஜன நெருக்கடியான தெருவில் இருக்கும் மிகவும் புகழ் பெற்ற ஸ்டோர்ஸ் நிறுவனத்தின்விளம்பரம் அதில் முக்கியமானது.

இந்த விளம்பரத்தில் நடிக்கப் போய்த்தான் விதி நடிகையின் வாழ்வில் விளையாடத் தொடங்கியது என்கிறார்கள். ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் வாரிசுகளில் ஒருவர்,புன்னகைக்கு வலை வீசியுள்ளார். ஆரம்பத்தில் படு ஸ்ட்ராங்காக இருந்துள்ளார் நடிகை. இனிமேல் உங்களது விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூடகூறியுள்ளார். இருப்பினும் வாரிசு அவரை சமாதானப்படுத்தி சாந்தப்படுத்தியுள்ளார்.

பின்னொரு இன்னொரு விளம்பரத்தில் நடிக்க ஸ்டோர்ஸ் வாய்ப்பு கொடுத்தது. அதில் நடிக்கும்போதுதான், கல் கரைந்து, உடைந்து போனதாம். வெற்றிக் களிப்பில்மிதந்த வாரிசு, சிட்டியிலேயே மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கு நடிகையை அழைத்துச் சென்றுள்ளது. அப்போது பார்த்தா போலீஸ் ரெய்டு வர வேண்டும்?வந்தவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ந்து போயுள்ளார்கள்.

அடுத்த விளம்பரத்திற்கான ஆலோசனை என்று இருவரும் கூறினாலும், காக்கிகள் விடவில்லையாம். இதையடுத்து தனது உறவினரும், முன்னணி நடனமாஸ்டருமான லாவிடம் நடிகை புலம்பியுள்ளார். லா பதறியடித்து ஆச்சியிடம் ஓடியுள்ளார். அவர் தோழியிடம் பேசி, காக்கிகளுக்கு உத்தரவு வந்து அதன் பிறகுதான்இருவரும் செல்ல அனுமதிக்கப்பட்டார்களாம்.

இதுதான் நடிகைக்கும், நடிகருக்கும் இடையே ஏற்பட்ட முதல் விரிசலாம். இந்த பஞ்சாயத்துக்குப் பிறகு கொஞ்ச காலம் அமைதியாக இருந்தவரை அந்த ஆக்ஷன்நாயகன் கலைத்து விட்டார். கடலோரம் நிலத்தை வாங்கிப் போட்டு வெறுமனே காத்து வாங்குவதை விட சிட்டிக்குள் அட்டகாசமான இடத்தை வாங்கிப் போட்டு,பிளாட் போட்டு விற்றால் நல்ல காசு கிடைக்கும் என்று அவர் ஐடியா கூற அதை அப்படியே கேட்டுள்ளார் நடிகை.

நிலத்தையும் வாங்கி பிளாட்டும் போட்டு அதில் நடிகரும் 2 பிளாட்டுகளை வாங்கி போணி செய்து கொடுத்தாராம். அவரது அன்பைப் பார்த்து மெய் மறந்தார்,அவருடன் நடிக்கும் படத்தில் கவர்ச்சிக்கும் சம்மதித்தார், அப்படியே அவரது அடுத்த படத்திலும் இடத்தைப் பிடித்து விட்டார். இப்படியாக இரண்டாவது மற்றும் இறுதிவிரிசல் விழுந்ததாம்.

இந்த இரண்டுமே சேர்ந்துதான் நடிகரை ஆவேசப்பட வைத்து, அம்மணியிடமிருந்து விலக வைத்து விட்டதாம். இனிமேல் பேசக் கூட மாட்டேன், பெயரைக் கூடஉச்சரிக்க மாட்டேன் என்று நடிகர் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.

நடிகர் இப்படி அப்செட்டில் இருந்தபோதுதான் கனா படத்தில் நடித்த கா நடிகையோடு நெருக்கம் ஏற்பட்டதாம். நொந்தவனுக்கு நொங்கு கிடைத்த மாதிரி இந்த நட்புஇதமாக இருக்கவே கண்டினியூ செய்ய முடிவு செய்து விட்டாராம் நடிகர். நல்ல ஜோடியாக உலா வந்தார்கள், யார் கண் பட்டதோ, இப்படிப் பிரிந்து விட்டார்கள் எனஇவர்கள் மேல் நல்லெண்ணம் கொண்ட கோலிவுட்காரர்கள் சோகமாக கூறி வருகிறார்கள்.

அடேங்கப்பா, இவ்ளோ ஆயிப் போச்சா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil