»   »  ஸ்னேகாவின் எக்ஸ் காதலர் நாக்ரவி தற்கொலை முயற்சி ஸ்னேகாவைத் திருமணம் செய்வதாக இருந்த நாக்ரவி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.மலேசியாவைச் சேர்ந்த நாக்ரவி வளைகுடாவில் பட வினியோகஸ்தராக உள்ளார். அவருக்கும் ஸ்னேகாவுக்கும் காதல்ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் கூட நடந்ததாகக் கூறப்பட்டது. அது தொடர்பான படங்களும் வெளியாயின.இந் நிலையில் நாக்ரவி யார் என்றே தெரியாது. நானும் நாக்ரவியும் இருப்பது போன்ற படங்கள் (கட்டிப்பிடித்தபடி நிற்கும்படங்கள் உள்பட) கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை என்றார்.ஆனால், ஸ்னேகாவின் கூற்றை நாக்ரவி மறுத்தார். நானும் ஸ்னேகாவும் மலேசியாவில் எடுத்துக் கொண்ட படங்கள் அவை,அதை ஸ்னேகாவின் சகோதரி சங்கீதா தான் எடுத்தார் என்றார்.இதையடுத்து நாக்ரவி எனது அண்ணனின் நண்பர், மற்றபடி அவருக்கும் எனக்கும் திருமணம் எல்லாம் இல்லை என்று பல்டிஅடித்தார் ஸ்னேகா.இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் நாக்ரவி சென்னை வந்து வட பழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்துதங்கியுள்ளார். ஸ்னேகாவின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை சந்தித்துள்ளார்.ஏற்கனவே திட்டமிட்டபடி பிப்ரவரியில் எனக்கும் ஸ்னேகாவும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால்,உன்னுடன் ஸ்னேகாவுக்கு திருமணம் செய்யும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளனர்.இதையடுத்து ஹோட்டலுக்குத் திரும்பினார் நாக்ரவி. இந் நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் அவரது ரூம் கதவுதிறக்கப்படவில்லை.இதையடுத்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள் சென்னையில் வசிக்கும் நாக்ரவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கும் தகவல்தந்தனர். இதையடுத்து டாக்டர்களுடன் அங்கு வந்த தாயார் நிர்வாகிகளிடம் இன்னொரு சாவி வாங்கி ரூம் கதவத்ை திறந்தார்.அப்போது நாக்ரவி மயங்கிக் கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் தின்றது உறுதியானது. இதையடுத்துஅவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் நேற்று பிற்பகலில் மயக்கம் தெளிந்தார்.இதற்கிடையே நாக்ரவியின் ரூமில் ஒரு கடிதம் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதில் நானும் ஸ்னேகாவும் வரும் பிப்ரவரியில்திருமணம் செய்வதாக இருந்தோம். ஆனால், ஸ்னேகாவின் பெற்றோர் மனம் மாறியதால் திருமணம் நின்றிவிட்டது. ஸ்னேகாவைமறக்க முடியவில்லை. இதனால் உலகை விட்டுப் போகிறேன் என்று எழுதி வைத்துவிட்டு மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார்.தங்களது மகன் பிழைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் நாக்ரவியின் பெற்றோர் ஸ்னேகா சங்காத்தமே வேண்டாம் என அவருக்குஅறிவுறுத்தி வருவதாகத் தெரிகிறது.ஆனால், இந்தச் சம்பவம் குறித்து ஸ்னேகா தரப்பில் கேட்டால், நாக்ரவி நாடகமாடியதாகக் கூறுகின்றனர்.ஸ்னேகா தரப்பில் கூறுகையில், ஸ்னேகா நேற்று முன் தினம் தான் ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார். அவர்சென்னையில் இருப்பதை அறிந்து கொண்ட நாக்ரவி இங்கு வந்து தற்கொலைக்கு முயன்றதாக நாடகம் ஆடுகிறார்.எங்களை மிரட்டவும், ஸ்னேகாவை காதலித்தது போலவும் அனுதாபம் தேடிக் கொள்ள முயல்கிறார். அவர் எந்த விபரீத முடிவைஎடுத்தாலும் எங்களுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றனர்.ஸ்னேகா-நாக்ரவி ஆகியோர் நெருக்கமாக இருந்த படங்களை நாக்ரவி தான் இன்டர்நெட்டில் வெளியிட்டார் என ஸ்னேகாதரப்பு கோபமாக உள்ளது.இதற்கிடையே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நாக்ரவி மீது வட பழனி போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

ஸ்னேகாவின் எக்ஸ் காதலர் நாக்ரவி தற்கொலை முயற்சி ஸ்னேகாவைத் திருமணம் செய்வதாக இருந்த நாக்ரவி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.மலேசியாவைச் சேர்ந்த நாக்ரவி வளைகுடாவில் பட வினியோகஸ்தராக உள்ளார். அவருக்கும் ஸ்னேகாவுக்கும் காதல்ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் கூட நடந்ததாகக் கூறப்பட்டது. அது தொடர்பான படங்களும் வெளியாயின.இந் நிலையில் நாக்ரவி யார் என்றே தெரியாது. நானும் நாக்ரவியும் இருப்பது போன்ற படங்கள் (கட்டிப்பிடித்தபடி நிற்கும்படங்கள் உள்பட) கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை என்றார்.ஆனால், ஸ்னேகாவின் கூற்றை நாக்ரவி மறுத்தார். நானும் ஸ்னேகாவும் மலேசியாவில் எடுத்துக் கொண்ட படங்கள் அவை,அதை ஸ்னேகாவின் சகோதரி சங்கீதா தான் எடுத்தார் என்றார்.இதையடுத்து நாக்ரவி எனது அண்ணனின் நண்பர், மற்றபடி அவருக்கும் எனக்கும் திருமணம் எல்லாம் இல்லை என்று பல்டிஅடித்தார் ஸ்னேகா.இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் நாக்ரவி சென்னை வந்து வட பழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்துதங்கியுள்ளார். ஸ்னேகாவின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை சந்தித்துள்ளார்.ஏற்கனவே திட்டமிட்டபடி பிப்ரவரியில் எனக்கும் ஸ்னேகாவும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால்,உன்னுடன் ஸ்னேகாவுக்கு திருமணம் செய்யும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளனர்.இதையடுத்து ஹோட்டலுக்குத் திரும்பினார் நாக்ரவி. இந் நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் அவரது ரூம் கதவுதிறக்கப்படவில்லை.இதையடுத்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள் சென்னையில் வசிக்கும் நாக்ரவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கும் தகவல்தந்தனர். இதையடுத்து டாக்டர்களுடன் அங்கு வந்த தாயார் நிர்வாகிகளிடம் இன்னொரு சாவி வாங்கி ரூம் கதவத்ை திறந்தார்.அப்போது நாக்ரவி மயங்கிக் கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் தின்றது உறுதியானது. இதையடுத்துஅவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் நேற்று பிற்பகலில் மயக்கம் தெளிந்தார்.இதற்கிடையே நாக்ரவியின் ரூமில் ஒரு கடிதம் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதில் நானும் ஸ்னேகாவும் வரும் பிப்ரவரியில்திருமணம் செய்வதாக இருந்தோம். ஆனால், ஸ்னேகாவின் பெற்றோர் மனம் மாறியதால் திருமணம் நின்றிவிட்டது. ஸ்னேகாவைமறக்க முடியவில்லை. இதனால் உலகை விட்டுப் போகிறேன் என்று எழுதி வைத்துவிட்டு மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார்.தங்களது மகன் பிழைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் நாக்ரவியின் பெற்றோர் ஸ்னேகா சங்காத்தமே வேண்டாம் என அவருக்குஅறிவுறுத்தி வருவதாகத் தெரிகிறது.ஆனால், இந்தச் சம்பவம் குறித்து ஸ்னேகா தரப்பில் கேட்டால், நாக்ரவி நாடகமாடியதாகக் கூறுகின்றனர்.ஸ்னேகா தரப்பில் கூறுகையில், ஸ்னேகா நேற்று முன் தினம் தான் ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார். அவர்சென்னையில் இருப்பதை அறிந்து கொண்ட நாக்ரவி இங்கு வந்து தற்கொலைக்கு முயன்றதாக நாடகம் ஆடுகிறார்.எங்களை மிரட்டவும், ஸ்னேகாவை காதலித்தது போலவும் அனுதாபம் தேடிக் கொள்ள முயல்கிறார். அவர் எந்த விபரீத முடிவைஎடுத்தாலும் எங்களுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றனர்.ஸ்னேகா-நாக்ரவி ஆகியோர் நெருக்கமாக இருந்த படங்களை நாக்ரவி தான் இன்டர்நெட்டில் வெளியிட்டார் என ஸ்னேகாதரப்பு கோபமாக உள்ளது.இதற்கிடையே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நாக்ரவி மீது வட பழனி போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்னேகாவைத் திருமணம் செய்வதாக இருந்த நாக்ரவி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.

மலேசியாவைச் சேர்ந்த நாக்ரவி வளைகுடாவில் பட வினியோகஸ்தராக உள்ளார். அவருக்கும் ஸ்னேகாவுக்கும் காதல்ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் கூட நடந்ததாகக் கூறப்பட்டது. அது தொடர்பான படங்களும் வெளியாயின.

இந் நிலையில் நாக்ரவி யார் என்றே தெரியாது. நானும் நாக்ரவியும் இருப்பது போன்ற படங்கள் (கட்டிப்பிடித்தபடி நிற்கும்படங்கள் உள்பட) கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை என்றார்.


ஆனால், ஸ்னேகாவின் கூற்றை நாக்ரவி மறுத்தார். நானும் ஸ்னேகாவும் மலேசியாவில் எடுத்துக் கொண்ட படங்கள் அவை,அதை ஸ்னேகாவின் சகோதரி சங்கீதா தான் எடுத்தார் என்றார்.

இதையடுத்து நாக்ரவி எனது அண்ணனின் நண்பர், மற்றபடி அவருக்கும் எனக்கும் திருமணம் எல்லாம் இல்லை என்று பல்டிஅடித்தார் ஸ்னேகா.

இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் நாக்ரவி சென்னை வந்து வட பழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்துதங்கியுள்ளார். ஸ்னேகாவின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை சந்தித்துள்ளார்.


ஏற்கனவே திட்டமிட்டபடி பிப்ரவரியில் எனக்கும் ஸ்னேகாவும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால்,உன்னுடன் ஸ்னேகாவுக்கு திருமணம் செய்யும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து ஹோட்டலுக்குத் திரும்பினார் நாக்ரவி. இந் நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் அவரது ரூம் கதவுதிறக்கப்படவில்லை.

இதையடுத்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள் சென்னையில் வசிக்கும் நாக்ரவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கும் தகவல்தந்தனர். இதையடுத்து டாக்டர்களுடன் அங்கு வந்த தாயார் நிர்வாகிகளிடம் இன்னொரு சாவி வாங்கி ரூம் கதவத்ை திறந்தார்.


அப்போது நாக்ரவி மயங்கிக் கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் தின்றது உறுதியானது. இதையடுத்துஅவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் நேற்று பிற்பகலில் மயக்கம் தெளிந்தார்.

இதற்கிடையே நாக்ரவியின் ரூமில் ஒரு கடிதம் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதில் நானும் ஸ்னேகாவும் வரும் பிப்ரவரியில்திருமணம் செய்வதாக இருந்தோம். ஆனால், ஸ்னேகாவின் பெற்றோர் மனம் மாறியதால் திருமணம் நின்றிவிட்டது. ஸ்னேகாவைமறக்க முடியவில்லை. இதனால் உலகை விட்டுப் போகிறேன் என்று எழுதி வைத்துவிட்டு மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார்.

தங்களது மகன் பிழைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் நாக்ரவியின் பெற்றோர் ஸ்னேகா சங்காத்தமே வேண்டாம் என அவருக்குஅறிவுறுத்தி வருவதாகத் தெரிகிறது.


ஆனால், இந்தச் சம்பவம் குறித்து ஸ்னேகா தரப்பில் கேட்டால், நாக்ரவி நாடகமாடியதாகக் கூறுகின்றனர்.

ஸ்னேகா தரப்பில் கூறுகையில், ஸ்னேகா நேற்று முன் தினம் தான் ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார். அவர்சென்னையில் இருப்பதை அறிந்து கொண்ட நாக்ரவி இங்கு வந்து தற்கொலைக்கு முயன்றதாக நாடகம் ஆடுகிறார்.

எங்களை மிரட்டவும், ஸ்னேகாவை காதலித்தது போலவும் அனுதாபம் தேடிக் கொள்ள முயல்கிறார். அவர் எந்த விபரீத முடிவைஎடுத்தாலும் எங்களுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றனர்.

ஸ்னேகா-நாக்ரவி ஆகியோர் நெருக்கமாக இருந்த படங்களை நாக்ரவி தான் இன்டர்நெட்டில் வெளியிட்டார் என ஸ்னேகாதரப்பு கோபமாக உள்ளது.

இதற்கிடையே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நாக்ரவி மீது வட பழனி போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil