»   »  நானும் ஸ்னேகாவும்: போட்டு உடைக்கும் நாக்ரவி நமக்குள் காதல் இருக்கும் விஷயத்தை வெளியில் சொன்னால், எனது அறை முழுவதும் உனது பெயரை எழுதி வைத்து விட்டுதற்கொலை செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்னேகா தன்னை மிரட்டினார் என்று அவருடன் இணைத்துப் பேசப்படும்தொழிலதிபர் நாக்ரவி கூறியுள்ளார்.படப்பிடிப்பின்போது நடிகர் ஷாம் முத்தமிட்டதால் அவரை அறைந்தது, நடிகர் ஸ்ரீகாந்த்துடன் காதல், சென்னை துணிக்கடைஅதிபருடன் விவகாரமான நிலையில் பிடிபட்டது என தொடர்ந்து பல்வேறு பரபரப்புச் செய்திகளில் அடிபட்டவர் ஸ்னேகா.ஸ்ரீகாந்த்தைத்தான் ஸ்னேகா கல்யாணம் செய்து கொள்வார் என்று உறுதியாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென அவர்கள் காதல்முறிந்து விட்டதாக செய்தி வந்தது.இந் நிலையில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நாக்ரவி என்பவருடன், ஸ்னேகா படு அன்னியோன்யமாக இருக்கும்புகைப்படங்கள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தின. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக செய்திகள்வெளியாகின.ஆனால் வழக்கமாக பிற நடிகைகளைப் போலவே ஸ்னேகாவும் அதை மறுத்தார், நாக்ரவியோ, தான் ஸ்னேகாவை கல்யாணம்செய்து கொள்ளப் போவதாகக் கூறினார்.நாக்ரவியை யார் என்றே தெரியாது, அவருடன் நான் இருக்கும் படங்கள் கிராபிக்ஸ் மூலம் உருவாக்க்பட்டவை என்று ஒரு போடுபோட்டார் ஸ்னேகா.இதனால் வெறுத்துப் போயிருந்த நாக்ரவி சமீபத்தில் சென்னை வந்து ஸ்னேகா குடும்பத்தினரை சந்தித்தார். அங்கு அவருக்குஎன்ன நடந்ததோ, தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பியவர் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார் நாக்ரவி.இத்துடன் சர்ச்சை முடிந்தது என்று பார்த்தால் தற்போது மீண்டும் அது உயிர் பெற்றுள்ளது.ஸ்னேகா குறித்து நாக்ரவி விலாவாரியாக பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில்,நான் முதன் முதலில் ஸ்னேகாவை சென்னை விமான நிலையத்தில் வைத்துத்தான் பார்த்தேன். ஸ்னேகாவும், அவரது அண்ணனும் மலேசியா வந்தபோது அவர்களை எனது செலவில் அங்குள்ள ஹோட்டலில் தங்க வைத்தேன்.ஹோட்டல் பிடிக்கவில்லை என்று அவர்கள் கூறியதால், எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தேன்.எனது வீடும், குடும்பத்தினரையும் பிடித்துப் போனதால் வீட்டு வேலைகள் அனைத்தையும் ஸ்னேகா இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். அப்போது பாண்டு என்ற தெலுங்குப் படப்பிடிப்பு மலேசியாவில் எனது வீட்டுக்கு அருகே நடந்தது.நான்தான் எனது காரில் ஸ்னேகாவை தினமும் படப்பிடிப்பு தளத்திற்குக் கொண்டு போய் விடுவேன்.இந் நிலையில் செப்டம்பர் 13ம் தேதி ஸ்னேகாவின் அக்கா டின்னருக்கு ஏற்பாடு செய்தார். அங்கு நான் போனபோது ஸ்னேகா,அவரது அக்கா ஆகியோர் மட்டுமே இருந்தோம். அப்போதுதான் ஸ்னேகாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது அக்காவேண்டுகோள் விடுத்தார்.அதற்கு நான் எனது வீட்டில் சினிமா நடிகை என்றால் திருமணத்துக்கு ஏற்க மாட்டார்களே என்றேன். இருப்பினும்கல்யாணத்திற்குப் பிறகு சினிமாவை சுத்தமாக மறந்து விடுவதாக இருந்தால் ஓ.கே. என்றேன்.இதை ஒத்துக் கொண்ட ஸ்னேகாவின் அக்கா, இப்போதைக்கு கையில் இரண்டு படங்கள்தான் உள்ளன. அவைதான் அவரதுகடைசிப் படங்கள். எனவே மோதிரம் மாற்றிக் கொண்டு விடுவோம். வைர மோதிரம் வாங்கி வாருங்கள் என்றார்.இதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியடைந்த நான் வைர மோதிரம் வாங்கி வந்தேன். அதை எனக்கு ஸ்னேகா அணிவித்தார். பிறகுஅவருக்கு நான் வைர நெக்லசும் வாங்கிக் கொடுத்தேன். இதன் மதிப்பு ரூ. 8.9 லட்சமாகும்.இந் நிலையில் சென்னையில் ஸ்னேகாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது நான் வாங்கிக் கொடுத்த வைரநெக்லசும் மாட்டிக் காண்டது. அந்த சமயத்தில் நான் அங்கு சென்றேன். அப்போது என்னை தனது மருமகன் என்று வருமானவரி அதிகாரிகளிடம் ஸ்னேகாவின் அப்பா ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.கடந்த தீபாவளியைக் கூட நான் ஸ்னேகாவின் வீட்டில்தான் கொண்டாடினேன். அதேபோல அவரது பிறந்த நாளைக் கூடஸ்னேகாவுடன் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினேன்.ஒருமுறை ஷாப்பிங் சென்றோம். எனது கிரடிட் கார்ட் மூலம் ஸ்னேகாவுக்கு ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம்.அப்போது நடிகர் அஜீத்தும் அங்கு வந்திருந்தார். அவரிடம், என்னை குடும்ப நண்பர் என ஸ்னேகா அறிமுகம் செய்து வைத்தார்.இந் நிலையில்தான் எங்களது விஷயம் வெளியில் கசிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்னேகா, என்னிடம் போனில்பேசினார். எனது விஷயங்களை வெளியில் தெரிவித்தால் உங்களது பெயரை சுவர் முழுக்க எழுதி வைத்து விட்டுத் தற்கொலைசெய்து கொள்வேன் என்று மிரட்டினார்.நம்மால் எதற்கு ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட வேண்டும் என்று யோசித்த நான் அமைதியாக இருந்து வந்தேன்.ஆனால் ஸ்னேகாவின் குடும்பத்தார் அவ்வாறு யோசிக்கவில்லை.என் திருமண விஷயம் குறித்து ஸ்னேகாவின் குடும்பத்தாருடன் எனது தாயார், குடும்பத்தினர், உறவினர்கள் பேசிய போதெல்லாம்எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவது போல ஸ்னேகாவும், அவரது குடும்பத்தினரும் நடந்து கொண்டனர்.இதனால் தான் அத்தனை விஷயத்தையும் நான் இப்போது வெளியில் சொல்கிறேன். மன வேதனையால்தான் தற்கொலைக்கும்நான் முயன்றது உண்மை தான் என்றார் நாக்ரவி.நாக்ரவியின் இந்த மனம் திறந்த பேட்டிக்கு பதிலளிக்க ஸ்னேகா மறுத்து விட்டார். என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோஅவ்வளவையும் நாக்ரவி செய்து விட்டார். இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியாத அளவுக்கு நான் மன உளைச்சலுக்குஆளாகியுள்ளேன் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

நானும் ஸ்னேகாவும்: போட்டு உடைக்கும் நாக்ரவி நமக்குள் காதல் இருக்கும் விஷயத்தை வெளியில் சொன்னால், எனது அறை முழுவதும் உனது பெயரை எழுதி வைத்து விட்டுதற்கொலை செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்னேகா தன்னை மிரட்டினார் என்று அவருடன் இணைத்துப் பேசப்படும்தொழிலதிபர் நாக்ரவி கூறியுள்ளார்.படப்பிடிப்பின்போது நடிகர் ஷாம் முத்தமிட்டதால் அவரை அறைந்தது, நடிகர் ஸ்ரீகாந்த்துடன் காதல், சென்னை துணிக்கடைஅதிபருடன் விவகாரமான நிலையில் பிடிபட்டது என தொடர்ந்து பல்வேறு பரபரப்புச் செய்திகளில் அடிபட்டவர் ஸ்னேகா.ஸ்ரீகாந்த்தைத்தான் ஸ்னேகா கல்யாணம் செய்து கொள்வார் என்று உறுதியாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென அவர்கள் காதல்முறிந்து விட்டதாக செய்தி வந்தது.இந் நிலையில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நாக்ரவி என்பவருடன், ஸ்னேகா படு அன்னியோன்யமாக இருக்கும்புகைப்படங்கள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தின. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக செய்திகள்வெளியாகின.ஆனால் வழக்கமாக பிற நடிகைகளைப் போலவே ஸ்னேகாவும் அதை மறுத்தார், நாக்ரவியோ, தான் ஸ்னேகாவை கல்யாணம்செய்து கொள்ளப் போவதாகக் கூறினார்.நாக்ரவியை யார் என்றே தெரியாது, அவருடன் நான் இருக்கும் படங்கள் கிராபிக்ஸ் மூலம் உருவாக்க்பட்டவை என்று ஒரு போடுபோட்டார் ஸ்னேகா.இதனால் வெறுத்துப் போயிருந்த நாக்ரவி சமீபத்தில் சென்னை வந்து ஸ்னேகா குடும்பத்தினரை சந்தித்தார். அங்கு அவருக்குஎன்ன நடந்ததோ, தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பியவர் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார் நாக்ரவி.இத்துடன் சர்ச்சை முடிந்தது என்று பார்த்தால் தற்போது மீண்டும் அது உயிர் பெற்றுள்ளது.ஸ்னேகா குறித்து நாக்ரவி விலாவாரியாக பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில்,நான் முதன் முதலில் ஸ்னேகாவை சென்னை விமான நிலையத்தில் வைத்துத்தான் பார்த்தேன். ஸ்னேகாவும், அவரது அண்ணனும் மலேசியா வந்தபோது அவர்களை எனது செலவில் அங்குள்ள ஹோட்டலில் தங்க வைத்தேன்.ஹோட்டல் பிடிக்கவில்லை என்று அவர்கள் கூறியதால், எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தேன்.எனது வீடும், குடும்பத்தினரையும் பிடித்துப் போனதால் வீட்டு வேலைகள் அனைத்தையும் ஸ்னேகா இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். அப்போது பாண்டு என்ற தெலுங்குப் படப்பிடிப்பு மலேசியாவில் எனது வீட்டுக்கு அருகே நடந்தது.நான்தான் எனது காரில் ஸ்னேகாவை தினமும் படப்பிடிப்பு தளத்திற்குக் கொண்டு போய் விடுவேன்.இந் நிலையில் செப்டம்பர் 13ம் தேதி ஸ்னேகாவின் அக்கா டின்னருக்கு ஏற்பாடு செய்தார். அங்கு நான் போனபோது ஸ்னேகா,அவரது அக்கா ஆகியோர் மட்டுமே இருந்தோம். அப்போதுதான் ஸ்னேகாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது அக்காவேண்டுகோள் விடுத்தார்.அதற்கு நான் எனது வீட்டில் சினிமா நடிகை என்றால் திருமணத்துக்கு ஏற்க மாட்டார்களே என்றேன். இருப்பினும்கல்யாணத்திற்குப் பிறகு சினிமாவை சுத்தமாக மறந்து விடுவதாக இருந்தால் ஓ.கே. என்றேன்.இதை ஒத்துக் கொண்ட ஸ்னேகாவின் அக்கா, இப்போதைக்கு கையில் இரண்டு படங்கள்தான் உள்ளன. அவைதான் அவரதுகடைசிப் படங்கள். எனவே மோதிரம் மாற்றிக் கொண்டு விடுவோம். வைர மோதிரம் வாங்கி வாருங்கள் என்றார்.இதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியடைந்த நான் வைர மோதிரம் வாங்கி வந்தேன். அதை எனக்கு ஸ்னேகா அணிவித்தார். பிறகுஅவருக்கு நான் வைர நெக்லசும் வாங்கிக் கொடுத்தேன். இதன் மதிப்பு ரூ. 8.9 லட்சமாகும்.இந் நிலையில் சென்னையில் ஸ்னேகாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது நான் வாங்கிக் கொடுத்த வைரநெக்லசும் மாட்டிக் காண்டது. அந்த சமயத்தில் நான் அங்கு சென்றேன். அப்போது என்னை தனது மருமகன் என்று வருமானவரி அதிகாரிகளிடம் ஸ்னேகாவின் அப்பா ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.கடந்த தீபாவளியைக் கூட நான் ஸ்னேகாவின் வீட்டில்தான் கொண்டாடினேன். அதேபோல அவரது பிறந்த நாளைக் கூடஸ்னேகாவுடன் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினேன்.ஒருமுறை ஷாப்பிங் சென்றோம். எனது கிரடிட் கார்ட் மூலம் ஸ்னேகாவுக்கு ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம்.அப்போது நடிகர் அஜீத்தும் அங்கு வந்திருந்தார். அவரிடம், என்னை குடும்ப நண்பர் என ஸ்னேகா அறிமுகம் செய்து வைத்தார்.இந் நிலையில்தான் எங்களது விஷயம் வெளியில் கசிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்னேகா, என்னிடம் போனில்பேசினார். எனது விஷயங்களை வெளியில் தெரிவித்தால் உங்களது பெயரை சுவர் முழுக்க எழுதி வைத்து விட்டுத் தற்கொலைசெய்து கொள்வேன் என்று மிரட்டினார்.நம்மால் எதற்கு ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட வேண்டும் என்று யோசித்த நான் அமைதியாக இருந்து வந்தேன்.ஆனால் ஸ்னேகாவின் குடும்பத்தார் அவ்வாறு யோசிக்கவில்லை.என் திருமண விஷயம் குறித்து ஸ்னேகாவின் குடும்பத்தாருடன் எனது தாயார், குடும்பத்தினர், உறவினர்கள் பேசிய போதெல்லாம்எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவது போல ஸ்னேகாவும், அவரது குடும்பத்தினரும் நடந்து கொண்டனர்.இதனால் தான் அத்தனை விஷயத்தையும் நான் இப்போது வெளியில் சொல்கிறேன். மன வேதனையால்தான் தற்கொலைக்கும்நான் முயன்றது உண்மை தான் என்றார் நாக்ரவி.நாக்ரவியின் இந்த மனம் திறந்த பேட்டிக்கு பதிலளிக்க ஸ்னேகா மறுத்து விட்டார். என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோஅவ்வளவையும் நாக்ரவி செய்து விட்டார். இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியாத அளவுக்கு நான் மன உளைச்சலுக்குஆளாகியுள்ளேன் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நமக்குள் காதல் இருக்கும் விஷயத்தை வெளியில் சொன்னால், எனது அறை முழுவதும் உனது பெயரை எழுதி வைத்து விட்டுதற்கொலை செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்னேகா தன்னை மிரட்டினார் என்று அவருடன் இணைத்துப் பேசப்படும்தொழிலதிபர் நாக்ரவி கூறியுள்ளார்.

படப்பிடிப்பின்போது நடிகர் ஷாம் முத்தமிட்டதால் அவரை அறைந்தது, நடிகர் ஸ்ரீகாந்த்துடன் காதல், சென்னை துணிக்கடைஅதிபருடன் விவகாரமான நிலையில் பிடிபட்டது என தொடர்ந்து பல்வேறு பரபரப்புச் செய்திகளில் அடிபட்டவர் ஸ்னேகா.

ஸ்ரீகாந்த்தைத்தான் ஸ்னேகா கல்யாணம் செய்து கொள்வார் என்று உறுதியாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென அவர்கள் காதல்முறிந்து விட்டதாக செய்தி வந்தது.

இந் நிலையில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நாக்ரவி என்பவருடன், ஸ்னேகா படு அன்னியோன்யமாக இருக்கும்புகைப்படங்கள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தின. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக செய்திகள்வெளியாகின.


ஆனால் வழக்கமாக பிற நடிகைகளைப் போலவே ஸ்னேகாவும் அதை மறுத்தார், நாக்ரவியோ, தான் ஸ்னேகாவை கல்யாணம்செய்து கொள்ளப் போவதாகக் கூறினார்.

நாக்ரவியை யார் என்றே தெரியாது, அவருடன் நான் இருக்கும் படங்கள் கிராபிக்ஸ் மூலம் உருவாக்க்பட்டவை என்று ஒரு போடுபோட்டார் ஸ்னேகா.

இதனால் வெறுத்துப் போயிருந்த நாக்ரவி சமீபத்தில் சென்னை வந்து ஸ்னேகா குடும்பத்தினரை சந்தித்தார். அங்கு அவருக்குஎன்ன நடந்ததோ, தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பியவர் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார் நாக்ரவி.

இத்துடன் சர்ச்சை முடிந்தது என்று பார்த்தால் தற்போது மீண்டும் அது உயிர் பெற்றுள்ளது.

ஸ்னேகா குறித்து நாக்ரவி விலாவாரியாக பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில்,

நான் முதன் முதலில் ஸ்னேகாவை சென்னை விமான நிலையத்தில் வைத்துத்தான் பார்த்தேன்.

ஸ்னேகாவும், அவரது அண்ணனும் மலேசியா வந்தபோது அவர்களை எனது செலவில் அங்குள்ள ஹோட்டலில் தங்க வைத்தேன்.ஹோட்டல் பிடிக்கவில்லை என்று அவர்கள் கூறியதால், எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தேன்.


எனது வீடும், குடும்பத்தினரையும் பிடித்துப் போனதால் வீட்டு வேலைகள் அனைத்தையும் ஸ்னேகா இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். அப்போது பாண்டு என்ற தெலுங்குப் படப்பிடிப்பு மலேசியாவில் எனது வீட்டுக்கு அருகே நடந்தது.

நான்தான் எனது காரில் ஸ்னேகாவை தினமும் படப்பிடிப்பு தளத்திற்குக் கொண்டு போய் விடுவேன்.

இந் நிலையில் செப்டம்பர் 13ம் தேதி ஸ்னேகாவின் அக்கா டின்னருக்கு ஏற்பாடு செய்தார். அங்கு நான் போனபோது ஸ்னேகா,அவரது அக்கா ஆகியோர் மட்டுமே இருந்தோம். அப்போதுதான் ஸ்னேகாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது அக்காவேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு நான் எனது வீட்டில் சினிமா நடிகை என்றால் திருமணத்துக்கு ஏற்க மாட்டார்களே என்றேன். இருப்பினும்கல்யாணத்திற்குப் பிறகு சினிமாவை சுத்தமாக மறந்து விடுவதாக இருந்தால் ஓ.கே. என்றேன்.

இதை ஒத்துக் கொண்ட ஸ்னேகாவின் அக்கா, இப்போதைக்கு கையில் இரண்டு படங்கள்தான் உள்ளன. அவைதான் அவரதுகடைசிப் படங்கள். எனவே மோதிரம் மாற்றிக் கொண்டு விடுவோம். வைர மோதிரம் வாங்கி வாருங்கள் என்றார்.

இதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியடைந்த நான் வைர மோதிரம் வாங்கி வந்தேன். அதை எனக்கு ஸ்னேகா அணிவித்தார். பிறகுஅவருக்கு நான் வைர நெக்லசும் வாங்கிக் கொடுத்தேன். இதன் மதிப்பு ரூ. 8.9 லட்சமாகும்.


இந் நிலையில் சென்னையில் ஸ்னேகாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது நான் வாங்கிக் கொடுத்த வைரநெக்லசும் மாட்டிக் காண்டது. அந்த சமயத்தில் நான் அங்கு சென்றேன். அப்போது என்னை தனது மருமகன் என்று வருமானவரி அதிகாரிகளிடம் ஸ்னேகாவின் அப்பா ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

கடந்த தீபாவளியைக் கூட நான் ஸ்னேகாவின் வீட்டில்தான் கொண்டாடினேன். அதேபோல அவரது பிறந்த நாளைக் கூடஸ்னேகாவுடன் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினேன்.

ஒருமுறை ஷாப்பிங் சென்றோம். எனது கிரடிட் கார்ட் மூலம் ஸ்னேகாவுக்கு ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம்.அப்போது நடிகர் அஜீத்தும் அங்கு வந்திருந்தார். அவரிடம், என்னை குடும்ப நண்பர் என ஸ்னேகா அறிமுகம் செய்து வைத்தார்.

இந் நிலையில்தான் எங்களது விஷயம் வெளியில் கசிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்னேகா, என்னிடம் போனில்பேசினார். எனது விஷயங்களை வெளியில் தெரிவித்தால் உங்களது பெயரை சுவர் முழுக்க எழுதி வைத்து விட்டுத் தற்கொலைசெய்து கொள்வேன் என்று மிரட்டினார்.


நம்மால் எதற்கு ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட வேண்டும் என்று யோசித்த நான் அமைதியாக இருந்து வந்தேன்.ஆனால் ஸ்னேகாவின் குடும்பத்தார் அவ்வாறு யோசிக்கவில்லை.

என் திருமண விஷயம் குறித்து ஸ்னேகாவின் குடும்பத்தாருடன் எனது தாயார், குடும்பத்தினர், உறவினர்கள் பேசிய போதெல்லாம்எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவது போல ஸ்னேகாவும், அவரது குடும்பத்தினரும் நடந்து கொண்டனர்.

இதனால் தான் அத்தனை விஷயத்தையும் நான் இப்போது வெளியில் சொல்கிறேன். மன வேதனையால்தான் தற்கொலைக்கும்நான் முயன்றது உண்மை தான் என்றார் நாக்ரவி.

நாக்ரவியின் இந்த மனம் திறந்த பேட்டிக்கு பதிலளிக்க ஸ்னேகா மறுத்து விட்டார். என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோஅவ்வளவையும் நாக்ரவி செய்து விட்டார். இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியாத அளவுக்கு நான் மன உளைச்சலுக்குஆளாகியுள்ளேன் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil