சரமாரி ஆபாச அர்ச்சனை.. அந்த 'ஓவர் வாய்' ஹீரோயினை அப்படிக் கிழித்து தொங்கவிட்ட காச் மூச் நடிகைகள்!

By

சென்னை: அந்த ஹீரோயினுக்கு எதிராக திடீரென ஒன்று கூடிய சில நடிகைகள், கண்டபடி கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள் அவரை.

சில நேரம் இப்படியாகி விடுகிறது. எதையாவது ஜாலியாகச் சொல்லப் போய், அது சீரியசான மேட்டரில் கொண்டு போய் விட்டுவிடும்.

அப்படித்தான், அந்த ஹீரோயின் சொன்ன விஷயமும் சீரியஸ் மேட்டர் ஆகி இருக்கிறது.

பார்ட்டி பழக்கம்

பார்ட்டி பழக்கம்

தமிழ் சினிமாவுக்கு நாயகிகளை இறக்குமதி செய்யும் கடவுளின் தேசத்தில் இருந்து வந்தவர் அந்த ஹீரோயின். சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்ட அவர், முதலில் அடக்க ஒடுக்கமாகத்தான் இருந்தார். சினிமாவின் பார்ட்டி பழக்க வழக்கங்கள் அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற, மாறினார் அவரும்.

விடிய விடிய குடி

விடிய விடிய குடி

சிலருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். பிறகு அந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பிரபலமான ஹீரோ படத்தில் இணைந்து நடித்த பிறகு மது பழக்கத்துக்கு சரண்டர் ஆனார். விடிய விடிய குடித்துவிட்டு, மட்டையானதாகவும் உடன் வந்த ஹீரோ பத்திரமாக அவரை வீட்டில் கொண்டு சேர்த்ததாகவும் கூட வந்தது தகவல்.

கொரோனா கொடூரம்

கொரோனா கொடூரம்

பிறகுதான் நடிகையின் உடல் கன்னாபின்னாவென ஊதியது. அதனாலேயே சில வாய்ப்புகள் பறிபோயின. இந்த நேரத்தில்தான் கொரோனா கொடூரமாக பரவியது. இதைப் பயன்படுத்தி, உடல் எடையை அதிகமாக குறைத்து போட்டோஷூட் நடத்தினார் நடிகை. அந்த புகைப்படங்களை வெளியிட்டார்.

டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி

இந்நிலையில் அந்த பிரபலமான டிவி நிகழ்ச்சியில் அவரும் கலந்துகொள்ள இருப்பதாக வந்தன தகவல்கள். இதுபற்றிய செய்தி வேகமாக பரவியது. இதற்கு மறுப்புத் தெரிவித்து இருந்தார் அவர். இருந்தும் தொடர்ந்து இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

டாய்லெட் மேட்டர்

டாய்லெட் மேட்டர்

இதனால் கடுப்பான நடிகை, காட்டமாகப் பதில் அளித்தார். அதில் ஒன்றுதான், மத்தவங்க டாய்லெட்டை கழுவறதா என் வேலை என்பது. இந்த வார்த்தை கொஞ்சம் ஓவராகவே சென்றுவிட, சில நடிகைகளுக்கு ஜிவ்வென ஏறியிருக்கிறது கோபம். இதனால் திடீரென போனில் ஒன்று கூடியிருக்கிறார்கள் அந்த நடிகைகள்.

சரியான அர்ச்சனை

சரியான அர்ச்சனை

அந்த நடிகையை, 'ஓவர் வாய்' என்று ஆரம்பித்து, சரமாரியாக அர்ச்சனை செய்திருக்கிறார்களாம் மோசமான வார்த்தைகளால். இவங்க வண்டவாளம் தெரியாதா என நடிகையின் பல விஷயங்களை தோண்டி எடுத்து ஆவேசமாக விவாதித்திருக்கிறார்களாம். அவரைப் பற்றிய சில உள் தகவல்களை ரகசியமாக கசிய விடவும் பேசி இருக்கிறார்கள்.

அதிரடி திட்டம்

அதிரடி திட்டம்

அவர் வாய்ப்புகளைப் பறிக்கவும் அதிரடி திட்டம் நடந்திருக்கிறது என்கிறார்கள். ஏற்கனவே நடிகைக்கு இங்கு வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் இப்படி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டாரே என்கிறார்கள், நடிகைக்கு வேண்டியவர்கள். கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்காகி இருக்கிறது இந்த சம்பவம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X