'சிறுத்தை'யின் படம் ஊத்திக்கிச்சே: பார்ட்டி வைத்து விடிய விடிய கொண்டாட்டம்
சென்னை: சிறுத்தை நடிப்பில் அண்மையில் வெளிவந்த பியூட்டி கிங் படம் ஊத்திக் கொண்டதை சில ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்களாம்.
கோடம்பாக்கத்தில் ஏதாவது ஒரு படம் ஓடாவிட்டால் அந்த படத்தில் நடித்த நடிகர் அல்லது இயக்குனரை பிடிக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் சிறுத்தையின் நடிப்பில் அண்மையில் ரிலீஸான பியூட்டி கிங் படம் பப்படமாகிவிட்டது. இந்த படத்தை சிறுத்தை பெரிதும் எதிர்பார்த்த நிலையில் படம் ஊத்திக் கொண்டது.
சிறுத்தையின் படம் ஓடாததை சில ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள் பார்ட்டி வைத்து விடிய, விடிய கொண்டாடியுள்ளார்களம். பார்ட்டியில் சிறுத்தை மற்றும் அவரது அண்ணன் சிங்கம் ஆகியோரை நக்கல் அடித்துள்ளார்கள்.
இந்த தகவல் காற்று வாக்கில் சிறுத்தையின் காதில் விழுந்துள்ளது. இதைக் கேட்டதும் சிறுத்தை சீறிவிட்டதாம். நம் படமும் ஓடும், நாமும் பார்ட்டி வைக்கலாம் என்று கூறி அவரை கூலாக்கினார்களாம்.


Click it and Unblock the Notifications











