அது மட்டும் காரணமில்லையாம்.. மனைவி இறங்கி வர மறுத்துவிட்டாரா?.. உச்ச விரக்தியில் மாஸ் நடிகர்?

By Staff

சென்னை: மாஸ் நடிகருக்கு உச்சக்கட்ட சோதனை காலம் இதுவாகத்தான் இருக்கும் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

வாரிசு நடிகர் என்ற முத்திரையோடு உள்ளே வந்து தற்போது தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கும் அந்த நடிகரின் கடைசி இரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வசூல் ரீதியாக அந்தப் படங்கள் நன்றாக ஓடினாலும் விமர்சன ரீதியாக கடும் ட்ரோல்களை சந்தித்தன. இதன் காரணமாக எப்படியாவது ஒரு க்ளாஸ் பந்தயம் அடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் மாஸ் நடிகர்.

Some other reasons are given for canceling the Mass Actors film Function

காபி படம்: எனவே இளம் இயக்குநருடன் கைகோர்த்து காபி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. அந்த லிஸ்ட்டை பார்த்தவர்கள் இத்தனை பேருக்கு மத்தியில் எப்படி எங்கள் தலைவருக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் இருக்கும் என குழம்பும் அளவுக்கு லிஸ்ட் இருக்கிறது. இருந்தாலும் இயக்குநர் கில்லி என்பதால் மாஸாகத்தான் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள்.

புது பஞ்சாயத்து: நிலைமை இப்படி இருக்க உச்ச நடிகருக்கும், இந்த நடிகருக்கும் போட்டியை உருவாக்கிவிட்டார்கள் சிலர். உச்ச நடிகர் ஒரு நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தை பேச; அது இவருக்கு எதிராகத்தான் பேசப்பட்டது என்று சொல்ல; இவரின் ரசிகர்களோ எங்கள் ஆளின் பதிலடியை பாருங்க கண்டிப்பாக தரத்துடன் இருக்கும் என மேடை மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தனர்.

அப்செட்: ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் மேடையில் எல்லாம் உங்கள் ஆள் ஏறமாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட். எதுவும் காரணமில்லை என்று விளக்கமளித்தாலும் உள்ளே சில காரணங்கள் இருப்பதாக முணுமுணுக்கின்றனர் விவரமறிந்தவர்கள். முதலில் அரசியல் அழுத்தம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. பெரிய நிறுவனம் ஒன்று படத்தின் வெளியீட்டு உரிமத்தை கேட்டதாகவும் அந்த அழுத்தம் தாங்க முடியாமல்தான் விழாவை ரத்து செய்ததாகவும் பேசப்படுகிறது.

அது மட்டும் காரணமில்லை: தற்போது புதிய விஷயம் ஒன்று கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது அரசியல் அழுத்தத்தைவிட வேறு ஒரு அழுத்தம்தான் அந்த நடிகருக்கு பெரிய தலை வலியாக இருக்கிறதாம். சமீபகாலமாகவே நடிகருக்கும் அவரது மனைவிக்கும் பெரும் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் கசிந்தது அனைவரும் அறிந்ததே. அந்தப் பிரச்னையை முடித்து வைக்க எத்தனையோ கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் மனைவி இறங்கி வருவதாக இல்லை என கூறுகிறார்கள் சிலர்.

நிலைமை இப்படி இருக்க நடிகர் தனது அனைத்து பட சம்பந்தமான நிகழ்ச்சிக்கு மனைவியை அழைத்து வருவது வழக்கம். நடிகருக்கும் மனைவிக்கும் பிரச்னை ஆரம்பித்த சமயத்தில் இவர் முத்திரை எடுத்த பெயரிலேயே வெளியான படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் மனைவி கலந்துகொள்ளவில்லை. அப்போதே சில சந்தேகங்கள் எழுந்தாலும் சரி வெளிநாட்டில் இருப்பார் அதனால் வந்திருக்க முடியாது என்று பலரும் சாதாரணமாக கடந்துவிட்டார்கள்.

ஆனால் இந்தப் படத்தின் விழாவுக்கும் அவர் வரமுடியாது என்று சொல்லிவிட்டாராம். அவர் வராமல் விழா நடந்தால் ஏற்கனவே நடந்த விழாக்களையும் கடைசி படம் மற்றும் இந்த படத்தின் விழாவையும் ஒப்பிடுவார்கள். மேலும் தன்னை பற்றிய பேச்சுக்கள் அதிகம் வெளியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே அவர் வராதபட்சத்தில் தனக்கும் மனைவிக்கும் பிரச்னைதான் என்பது வெளியில் உறுதியாகிவிடும் என யோசித்த மாஸ் நடிகர்; தான் மேடை ஏறுவதைவிட முக்கியம் தன் இமேஜ் உயரத்தில் இருப்பதுதான். மனைவி வராமல் மேடை ஏறி தன்னுடைய இமேஜை கீழே இறக்கிக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துதான் பட விழாவே நடத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X