அந்த இயக்குநர் மட்டுமில்லையாம்.. சில முன்னணி நடிகைகளே சீரியஸான வழக்கில் சிக்கப் போறாங்களாம்?
சென்னை: பாலிவுட், கன்னட திரையுலகம் அந்த சீரியஸான மேட்டரில் சிக்கிய நிலையில், கோலிவுட்டிலும் சிலர் அந்த பிரச்சனையில் வசமாக சிக்கப் போவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
பல கோடிகள் புழங்கும் சினிமா திரையில் சில கருப்பு ஆடுகள் தவறான பாதையில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டும் சினிமா படங்களை உருவாக்குவது, அதில் முதலீடு செய்வது என ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளை செய்து தங்களை தயாரிப்பாளராகவும் சினிமா பிரபலமாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல வசமாக சிக்கும் போது அந்த நபர் மட்டுமின்றி அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும் சேர்ந்து ஆப்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கிய தயாரிப்பாளர்: தவறான தொழில் செய்து சினிமா படங்களை தயாரித்து வந்த நிலையில், சமீபத்தில் அவர் வசமாக சிக்கி விட்டார். அவர் தயாரிப்பில் உருவான சில படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் கடைசி நேரத்தில் சிக்கிக் கொண்டது அந்த படத்தில் நடித்த நடிகர்களையும் ரொம்பவே பாதித்துள்ளது.
இயக்குநருக்கு சிக்கல்: அந்த தயாரிப்பாளருடன் இணைந்து பல்வேறு தொழில்களில் இணைந்து செயல்பட்டு வந்த இயக்குநருக்கு பெரும் பங்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவிலேயே அந்த இயக்குநரை கைது செய்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்கிற முயற்சியில் இயக்குநரும் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.
நடிகைகளுக்கு தொடர்பு: பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகள் அந்த விவகாரத்தில் சிக்கிய நிலையில், கோலிவுட்டிலும் ஒரு சில முன்னணி நடிகைகளே இந்த விவகாரத்தில் சிக்கப் போவதாகவும் அந்த தயாரிப்பாளருடன் அவர்கள் சில வருடங்களாக தொடர்ந்து ரொம்பவே நெருக்கமாக பழகி வந்ததும் அம்பலமாகி உள்ளது என்கின்றனர்.
அதிர்ச்சியில் ஹீரோயின்கள்: நம்முடைய பெயரும் இந்த விவகாரத்தில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது என அந்த நடிகைகளும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகின்றனர். இந்த விவகாரம் கூடிய விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் திடுக்கிட வைக்கின்றனர். இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை தமிழ் சினிமா சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











