For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உனக்கு வந்தா ரத்தம்.. எனக்கு வந்தா தக்காளி சட்னி.. நம்பர் நடிகையை மறைமுகமாக விளாசும் தயாரிப்பாளர்!

  By Staff
  |

  சென்னை: நம்பர் நடிகையின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து பயங்கரமாக தயாரிப்பாளர்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர்.

  டாப் நடிகர் வழியை பின்பற்றுகிறேன் என்கிற பேர் வழியில் எந்தவொரு பட புரமோஷனில் பங்கேற்காமல் இருந்து வந்தார் நம்பர் நடிகை.

  மாமாவும் மாப்பிள்ளையும் முதல் முறையாக.. போட்டோஸ் போட்ட நடிகர் அருண் விஜய்! மாமாவும் மாப்பிள்ளையும் முதல் முறையாக.. போட்டோஸ் போட்ட நடிகர் அருண் விஜய்!

  இந்நிலையில், சொந்த தயாரிப்பு என்பதால், இப்படி புரமோஷனுக்காக இறங்கி விட்டாரே என சில தயாரிப்பாளர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனராம்.

  முதலிடம்

  முதலிடம்

  நடிக்க வந்த வேகத்திலேயே முன்னிலை நடிகையான அவர், பல ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகையே கலக்கி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறார். சினிமா விட்டு விலகி விட்டார். ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என ஏகப்பட்ட தகவல்கல் வெளியானாலும், அடுத்த அடுத்த பட அப்டேட்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

  பல ஆண்டுகளாக

  பல ஆண்டுகளாக

  ஏற்கனவே இரு பிரபலங்களை காதலித்த அந்த நம்பர் நடிகை மூன்றாவதாக இயக்குநர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். அவருடனும் பல ஆண்டுகளாக வெறும் காதலித்து மட்டுமே வரும் அவர் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வார் என பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டே ரசிகர்களுக்கு வயதாகி விட்டது.

  சைடு பிசினஸ்

  சைடு பிசினஸ்

  சினிமாவை தாண்டி அதிரடியாக புதிய பிசினஸ் ஒன்றையும் தனது வருங்கால கணவருடன் இணைந்து சமீபத்தில் அந்த நம்பர் நடிகை தொடங்கி உள்ளார். மேலும், ஏகப்பட்ட சைடு பிசினஸ்களும் நடிகையின் பெயரில் நடந்து கொண்டே இருக்கிறதாம். சினிமாவும் ஒரு சைடு பிசினஸா என்றும் நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.

  புரமோஷனுக்கு நோ

  புரமோஷனுக்கு நோ

  படத்தில் நடிக்க பத்து கோடி பத்தாதேப்பா என கேட்டு வரும் அந்த நம்பர் நடிகை, நடித்து முடித்த கையோடு படக்குழுவுக்கு பெரிய டாட்டா காட்டிவிட்டு அடுத்த படத்திற்கு சென்று விடுவார். அந்த படம் வெளியாகிறதா? இல்லையா? படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்ல புரமோஷன்களில் கலந்து கொள்வது போன்ற விஷயங்களுக்கு பிக் நோ சொல்லி வருகிறார்.

  எல்லாம் மாறிடுச்சு

  எல்லாம் மாறிடுச்சு

  டாப் நடிகர் வழியை இவரும் பின் பற்றுகிறார். நடிக்க மட்டும் தானே சம்பளம் பேசுகின்றனர். மற்ற இதர விஷயங்களில் நடிகர்கள் கலந்து கொள்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என ரசிகர்களும் சமாதானம் ஆகி வந்த நிலையில், சட்டென்று மாறிய வானிலை போல திடீரென புதிய படத்திற்கு பழையபடி புரமோஷன் வேலைகளில் அதிரடியாக களமிறங்கி விட்டாராம் அந்த நம்பர் நடிகை.

  சொந்த தயாரிப்பு

  சொந்த தயாரிப்பு

  தயாரிப்பாளர் வேறு நபராக இருந்தால் அப்படியே எஸ்கேப் ஆகி விடலாம். ஆனால், இது சொந்த தயாரிப்பு ஆகிடுச்சே. இதை விட்டு எப்படி தப்பி செல்வது என்பதால், நம்பர் நடிகையே களமிறங்கி பெரிய அளவில் படத்தை விளம்பரப்படுத்தும் முடிவில் ஈடுபட்டு வருகிறாராம்.

  தக்காளி சட்னி

  தக்காளி சட்னி

  நடிகையின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு வந்தா ரத்தம், தயாரிப்பாளர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என கண்டபடி விளாசி வருகின்றனர். சில பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களே இது போன்ற கமெண்ட்டுகளை ஃபேக் ஐடிக்கள் மூலம் பதிவிட்டு வருவதாக கோடம்பாக்கம் கோடாங்கி ரகசிய தகவல் கொடுத்திருப்பது தான் இதில் ஹைலைட்டே!

  அது வேற வாய்

  அது வேற வாய்

  நம்பர் நடிகையின் நெருங்கிய நண்பர்களும் இதை பற்றி நேரடியாகவே அவரிடம் கேட்க, மாற்றம் ஒன்று தான் மாறாதது என அது வேற வாய் ரேஞ்சுக்கு பில்டப் பேச்சுகளை அவிழ்த்து விட்டு வருகிறாராம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? எப்படியாவது சொந்த படம் லாபத்தை தந்தால் போதும்.

  English summary
  Some Producers upset over Number actress recent promotion activities and starts teases her via in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X