அப்பாவே ஆரம்பத்துல இப்படித்தான்... அசரடிக்கும் மகன்!
அடல்ட் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் மகன் நடிகரிடம் யாராவது அட்வைஸ் செய்தால் சிரித்துக்கொண்டே நோஸ்கட் செய்துவிடுகிறாராம்.
நவரசத்தின் வாரிசு முன்னணி இயக்குநரின் படத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானார். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக சோபிக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் வெளியான அடல்ட் படம் மூலம் ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கிறது. தொடர்ந்தும் அதேபோன்ற படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் 'இப்படி நடிச்சு உங்க இமேஜைக் கெடுத்துக்கலாமா?' என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.
பதிலுக்கு நடிகர், "அப்பாவே ஆரம்பத்துல இப்படித்தான் நடிச்சாரு. விஜய், தனுஷ், சிம்புலேர்ந்து ஜிவி பிரகாஷ் வரைக்கும் நான் நிறைய உதாரணம் காட்டுவேன்," என்று சிரித்தபடி பதில் கொடுக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications