»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

டும் டும் எப்போ என்று என்னிடம் கேட்காதீர்கள். அப்பா, அம்மாதான் அதை முடிவு செய்வார்கள் என்று கூறுகிறார் சோனியாஅகர்வால்.

பஞ்சாபிக் குஜிலியான சோனியாவுக்கும், அவரது முதல் பட இயக்குநரான செல்வராகவனுக்கும் சீக்கிரமே டும் டும் என செய்திகள்பரவி வருகின்றன. அதற்கேற்றவாறு சோனியாவும் படங்களைக் குறைத்துக் கொண்டு விட்டார்.

இப்போது அவர் பாசில் இயக்கத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ஒரு நாள் ஒரு கனவு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வேறுபடங்களில் நடிக்கும் ஆர்வம் அவரிடம் இல்லையாம்.

ஒரு நாள் ஒரு கனவு படத்தில் கூட அவர் நடிப்பதற்கு செல்வராகவன்தான் காரணமாம். அவர்தான் கதை நன்றாக இருக்கிறது, நடிஎன்று பச்சைக் கொடி காட்டினாராம்.

அதனால்தான் பாசிலுக்கு ஓ.கே. சொல்லியுள்ளார். படப்பிடிப்பு தொடங்கி விட்டது.

டும் டும் எப்போ என்று சோனியாவிடம் கேட்டால், அதெல்லாம் எனக்குத் தெரியாது. அம்மா, அப்பாதான் அதை முடிவுசெய்வார்கள். இப்போதைய எனது கடமை படத்தில் நடிப்பது.

சரி, கல்யாணத்தை விடுங்கள், எனது பொழுதுபோக்கு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நல்லா சமைப்பதுதான்.

சமையலறையில் என்னை விட்டு விட்டால், கலக்கி எடுத்து விடுவேன். இதுவரை வட இந்திய ஐட்டங்களைத்தான் நிறைய செய்துவந்தேன். இப்போது இட்லி சுட கத்துக்கிட்டேன் (அட, மேட்டருக்கு வர்றாங்கப்பா!)

நல்லா இட்லி சுடுவதாக எனது சென்னை நண்பர்கள் (யாரோ?) பாராட்டுகிறார்கள். இட்லி வித்தியாசமான உணவுதான்.சாப்பிடவும், பார்க்கவும் நன்றாக இருக்கிறது. ஐ லவ் இட்லி நவ்!

அதேபோல சப்பாத்தியும் நல்லா பண்ணுவேன். எனது சப்பாத்திக்கு நிறைய பேர் அடிமை என்கிறார் புன்னகைப் பூவானசோனியா.

சோனியா இப்போது சென்னையிலேயே செட்டிலாகி விட்டார். ஷூட்டிங்கின்போது துணைக்கு அம்மா முன்பு வருவார், இப்போதுஅவர் அதிகம் வருவதில்லை.

என்னவென்று விசாரித்தால் அவர் பஞ்சாபுக்கு சென்று விட்டார் என்று கூறுகிறார்கள். அவ்வப்போது வந்து செல்கிறார்கள்.

சீக்கிரமா சட்டுப்புட்டுன்னு செட்டிலாகுங்கப்பா!

Read more about: cooking
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil