»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

மச்சம் என்பார்களே அதற்கு அர்த்தமாக சோனியா அகர்வாலைச் சொல்லலாம் போலிருக்கிறது.

பார்க்க அப்படி ஒன்றும் அபார அழகு கிடையாது. நடிப்பும் ஓ.கே. ரகம் தான். ஆனாலும், அம்மணியின்கைகொள்ளாத அளவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. கால்ஷீட் பார்த்து நேரம் ஒதுக்கமுடியாமல் திணறுகிறார்.

மானேஜர், பி.ஆர்.ஓ. என்றெல்லாம் யாரையும் போடாமல் தானே கால்ஷீட்களையும் கவனித்துக் கொள்கிறார்.

காதல் கொண்டேனில் ஆரம்பித்த அதிர்ஷ்டக் காற்று தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கிறது. சக்ஸஸ் படம்தோற்றதால் பயந்து போயிருந்தார். ஆனால், அந்தத் தோல்வியையும் மீறி 7 ஜி ரெயின்போ காலனி என்ற படம்கிடைத்தது.

அதைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சிலம்பரசனுடன் கோவில் படத்தில் நடிக்க வாய்ப்பு. இதில் படு கவர்ச்சிகாட்டி வரும் சோனியாவுக்கு இப்போது சதுரங்கம் என்ற படத்தில் ஸ்ரீகாந்துடன் நடிக்க சான்ஸ் அடித்திருக்கிறது.இதைத் தவிர பெயரிடப்படாத 2 படங்களும் புக் ஆகியிருக்கின்றன.

ஸ்ரீகாந்துடன் இவர் நடிக்கும் சதுரங்கத்தை இயக்குவது பார்த்திபன் கனவு டைரக்டர் கரு.பழனியப்பன். (முதலில்இந்தப் படத்துக்கு வணக்கம் தமிழகம் என்று பெயர் சூட்டி பின்னர் அதை சதுரங்கமாக மாற்றிவிட்டார்கள்).

இது தவிர ஒரு புதிய இயக்குனர் லவ் என்று சொல்லிக் கொண்டு சோனியாவை விரட்டி வருகிறாராம். அந்தக்காதலுக்கு நோ சொல்லிவிட்டார் சோனியா என்கிறார்கள்.

டென்சன் ஓவரோ என்னவே சூட்டிங்கின்போது அவ்வப்போது தம் ஊதித் தள்ளுகிறாராம் சோனியா. கோவில்பட ஸ்பாட்டில், ஷாட் இடைவேளைகளிலும் தனது மேக்-அப் அறைக்குள் பதுங்கும் சோனியா பப் அடித்துவிட்டுத்தான் வருகிறாராம். இதனால் இவர் பக்கத்தில் போனால் ஒரே சிகரெட் கப்பு அடிப்பதாக சொல்கிறார்கள் சூட்டிங்ஸ்பாட் சிகாமணிகள்.

இவரைப் போலவே, ஆனால் கொஞ்சம் ஓபனாகவே தம் அடிக்கும் இன்னொரு நடிகை ஷெரீன். காதலர் ரோஹன்சாலியனுடன் ஒரே ரூமில் தங்கியிருந்து தொடர்ந்து சென்னையில் வாய்ப்பு தேடும் ஷெரீன் அடிக்கடி கையில்வெண்குழல் பத்தியோடு காணப்படுகிறார். ஆனால், சூட்டிங் பாட்டில் இவர் தம் அடித்ததில்லை.

இந்த இருவராவது தம்மோடு நிற்கின்றனர். வாய்ப்புக்கள் இல்லாமல் தவித்து வரும் சார்மிங்கான நடிகையோகையில் பாட்டிலும் கையுமாக அலைவதாக கோடம்பாக்கம் ஆசாமிகள் சொல்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil