»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டிகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த சோனியா அகர்வால் குறித்து தினந்தோறும் ஏதாவது ஒரு புது கதைகோடம்பாக்கத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அவரது புகைக்கும் பழக்கமும், ஊத்தும் வழக்கமும் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக இருந்தது. ஆனால், இதைப்பற்றி சோனியா கொஞ்சமும் கவலைப்படவில்லை. மூடி மறைக்கவும் இல்லை. இதனால் சென்னையின் 5 நட்சத்திரஹோட்டல்களின் பார்களில் சோனியாவை அடிக்கடி தள்ளாட்டத்துடன் பார்க்க முடிகிறது.

அத்தோடு இப்போது அவர் குறித்து புதுக் கதையும் சொல்கிறார்கள். அவருக்கும் தனுசின் அண்ணனும் காதல்கொண்டேன் இயக்குனருமான செல்வராகவனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் தான் அந்த புது கிசுகிசு.உடம்பு சரியில்லாமல் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராகவனை இரவும் பகலும்பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டார் சோனியா.

இதனால் நெருக்கம் ரொம்பவே அதிகமாகிவிட்டதாம். எந்த அளவுக்கு என்றால், ஸ்கேனிங் சென்டருக்கும்பின்னர் ஹாஸ்பிடலுக்கும் போய் திரும்பும் அளவுக்கு என்கிறார்கள். படப்பிடிப்பில் சோனியா மயங்கி விழ,அதையடுத்து இந்த ஸ்கேனிங் சென்டர் விஷயம் நடந்துள்ளது.

சோனியா இப்போது ஹோட்டலில் தான் வாசம் செய்கிறார். அங்கு செல்வராகவன் அடிக்கடி வந்து போனதால்ஹோட்டல் நிர்வாகம் பிரச்னை செய்ய, அதுவே அடிதடி கலாட்டாவாக மாறியிருக்கிறது. கண்ணாடி ஜன்னல்கள்உடைந்து போனதால் சேதாரத்தைக் கட்டிவிட்டு வந்தாராம் செல்வர்.

இதையடுத்து தனது ஹோட்டல் வாசத்தை முடிவு கட்டிவிட்டு சென்னையிலேயே வீடு வாங்கும் யோசனைக்குவந்துவிட்டராம் சோனியா.

அவருக்கு வீடு தேடும் படலத்தை முன் நின்று நடத்துவதும் செல்வர் தான்.

செல்வராகவன் வீட்டில் சோனியாவுடனான காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் விட்டுத் தர அவர்மறுப்பதாகவும் சொல்கிறார்கள்.

இது தவிர தான் புக் ஆகும் எல்லா படங்களையும் செல்வரைக் கேட்டுத்தான் முடிவு செய்கிறார் சோனியா என்றும்சொல்கிறார்கள் கோடம்பாக்கம் பி.ஆர்.ஓக்கள்.

இதனால் அவரது கால்ஷீட் கேட்டு செல்வத்தை சிலர் நேரடியாகஅணுக ஆரம்பித்துவிட்டனர்.

இதற்கிடையே தனது அடுத்த ப்ராஜெக்டான ஒரு நாள் ஒரு கனவு படத்திலும் சோனியாவை ஹீரோயினாக புக்செய்திருக்கிறார் செல்வராகவன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil