இந்த ரூட் நல்லாருக்கே... கோடிகளாய் கொட்டிய பணம்... அலுங்காமல் குலுங்காமல் அள்ளிய 'ஜாலிகேலி'

By

சென்னை: அலுங்காமல் குலுங்காமல் கோடிகளை அள்ளிய ஜாலிகேலி இயக்குனர், இந்த ரூட் நல்லாருக்கே என்று தெரிவித்து வருகிறாராம் நண்பர்களிடம்.

அசராமல் மங்காத்தா ஆடியவர் அந்த ஜாலிகேலி இயக்குனர். இப்போது பொதுக்கூட்டம் படத்தை இயக்கி வருகிறார்.

இவர் இயக்கி சில படங்கள் ஹிட்டடித்து இருக்கின்றன. சில தோல்வியை சந்தித்து இருக்கின்றன. அதைப் பற்றி கவலையில்லை அவருக்கு.

ஜாலிகேலி இயக்குனர்

ஜாலிகேலி இயக்குனர்

எதையும் வெளிப்படையாகப் பேசும் இந்த ஜாலி கேலி இயக்குனருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அடித்தது, ஜாக்பாட். அதாவது பிரபல கார்ப்பரேட் நிறுவனம் இந்த இயக்குனரை அணுகி, வெப்சீரிஸ் இயக்கச் சொன்னது. யோசித்தார் இயக்கம். ஏன் யோசனை? இதுதான் உங்க சம்பளம் என்று சில கோடிகளைச் சொல்ல, அசந்து போய்விட்டாராம் இயக்கம்.

மாங்கு மாங்கு

மாங்கு மாங்கு

உடனே ஓகே சொல்லிவிட்டார். அந்த சில என்பது ஜஸ்ட், 24 கோடி ரூபாயாம்! இயக்குனர் செய்ய வேண்டியது, மூன்று வெப்சீரிஸ்களை அந்த நிறுவனத்துக்கு இயக்கிக் கொடுப்பது. மாங்கு மாங்கு என்று மூன்று படம் எடுத்து ஹிட் கொடுத்தாலும் இவ்வளவு தொகை கிடைக்காது என்பதால், உடனே வேலையிலும் இறங்கிவிட்டார்.

அலுங்காமல் குலுங்காமல்

அலுங்காமல் குலுங்காமல்

ஒவ்வொரு வெப்சீரிஸும் வெறும் 10 தொடர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு அதிக வேலையும் இல்லை. அலுங்காமல் குலுங்காமல் ஒரு சீரிஸை முடித்துவிட்டாராம். இதில் அகர்வால் நடிகை, கயல் நடிகை உட்பட சிலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்போது இயக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்த தொடர்களையும் இயக்க இருக்கிறாராம்.

எப்படி சேர்ந்தார்

எப்படி சேர்ந்தார்

இந்த விஷயம் தெரிந்து சில இயக்குனர்கள், தங்களுக்கும் வாய்ப்பு வேண்டி, எப்படி மூவ் பண்ணணும் என்று விசாரிக்க, எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது என்று தெரிய வந்திருக்கிறதாம். பெரிய டைரக்டர்கள் லிஸ்டில், அதாவது மேனன், மாறன் வரிசையில் இருப்பவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பாம். அது சரி, இவர்கள் லிஸ்டில், இந்த ஜாலிகேலி எப்படி சேர்ந்தார் என்று கேட்கிறார்கள், கோலிவுட்டில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X