சக்சஸும் இல்லை.. சான்ஸும் இல்லை.. சொகுசா வாழ நடிகை எடுத்த உஷார் முடிவு.. நல்ல கவனிப்பாம்

By Staff

சென்னை: இந்த நடிகை தென்னிந்திய சினிமாவில் இருந்து தான் தனது சினிமா கெரியரை தொடங்கினார். பாலிவுட் வரை சென்று பார்த்தாலும் நடிகைக்கு பான் இந்தியா அளவில் ஹிட் அடிக்கும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை. இப்படி இருக்கையில் நடிகை மிகவும் மன வருத்தத்துடன் சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வாழ எடுத்த முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அதாவது நடிகை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் நேரடியாகவே நடித்துவிட்டார். அதிலும் நடிகைக்கு தெலுங்கில் பெரிய அளவில் சக்சஸ் கொடுக்கும் என்று எதிர்பார்த்து நடிகை கமிட் ஆன படம் சொதப்பியது. அதே நிலைமைதான் நடிகைக்கு அனைத்து மொழிகளிலும். அதுவும் தமிழில் எல்லாம் நடிகை நடித்த படங்கள் அனைத்துமே முன்னணி நடிகர்களுடன் தான். இதனால் படங்கள் கொஞ்சம் சக்சஸ் ஆனாலும், படத்தில் நடிகையின் போர்ஷன் ஏதோ செட் பிராப்பர்ட்டி போலதான் இருந்துள்ளது.

South Actress Shifts Focus to Web Series and Ads After Film Career Setbacks New Strategy for Pan-India Fame

கைக்கு எட்டாத வெற்றி: இதனால் நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. தென்னிந்தியாவில் தான் இந்த நிலைமை, நாம் ஏன் இந்தியில் முயற்சி செய்யக்கூடாது என்று இந்தி சினிமாவில் நடித்து புகழ் பெறலாம் என்று ஆசையோடு சென்ற நடிகையை, அவர் கமிட் ஆன முதல் படத்திலேயே உச்சகட்ட கவர்ச்சியில் நடிக்க வைத்து, இந்த நடிகையிடம் இவ்வளவுதான் சரக்கு என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள். இதனால் நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் வரவில்லை.

சரியான முடிவு: செம்ம அப்செட் ஆன நடிகை தற்போது முழுக்க முழுக்க விளம்பரத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம், மேலும் படங்களில் நடிப்பதைக் காட்டிலும் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தலாம் என்றும், வெப் சீரிஸில் அதிக கவனம் செலுத்தும் போது பான் இந்தியா அளவில் பெரிய மார்க்கெட்டை தனக்கு உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் நடிகை நம்புகிறாராம். மேலும் வெப் சிரீஸ்களில் கமிட் ஆவதால் வருடம் முழுவதும் பிசியாக நடிக்கவும் முடியும் என்றும் எப்போதும் பிசியான ஆர்டிஸ்ட் என்று திரையுலகில் பேச்சு இருந்து கொண்டே இருக்கும் என்றும் நடிகை யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள், திறமையான நடிகை, இன்னும் அவரது திறமை இன்னும் முழுவதுமாக வெளிவரவில்லையே என்று உச்சு கொட்டி வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X