கிளாமரில் செஞ்சரி அடிக்கவும் தயார்.. அந்த ஒரு விஷயம் மட்டும் தான் நோக்கமே.. நடிகையின் எக்ஸ்ட்ரீம் முடிவு

By Staff

சென்னை: வாழ்க்கையில ஜெயிக்கணும்னா கொஞ்சம் கிளாமர் காட்டலாம், தப்பில்லை. ஆனா, ஜெயிக்கிற குதிரையா மாறணும்ன்றதுக்காக மொத்தமா எல்லையைக் கடந்து ரிஸ்க் எடுக்கத் துணிஞ்சிருக்காங்க அந்த தென்னிந்திய நடிகை.

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து, ஒரு காலத்தில் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த குடும்பப் பின்னணி கொண்ட நடிகை அவங்க. ஆரம்பத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து, விருதுகளையும் பாராட்டுகளையும் அள்ளினாங்க. ஆனா, சமீபகாலமா புதுப்புது இளம் நடிகைகளின் வரவால நம்ம ஆளு மார்க்கெட் கொஞ்சம் டல்லடிச்சுப் போச்சு. தியேட்டருக்கு வர்ற கூட்டமும் குறைய, நடிகைக்கு பட வாய்ப்புகளும் மெல்ல மெல்ல சரியத் தொடங்கினது.

சினிமாவில் 'அவுட் ஆஃப் ஃபோகஸ்' ஆகிடுவோமோன்ற பயம் வந்தா, யாருக்குமே கொஞ்சம் பதற்றம் வர்றது இயல்புதான். ஆனா, இந்த நடிகை எடுத்திருக்கிற முடிவுதான் இப்போ தென்னிந்திய சினிமா வட்டாரத்தையே 'அப்படியா!'ன்னு வாய் பிளக்க வச்சிருக்கு.

சமீபத்தில் ரிலீஸாக ரெடியா இருக்கிற ஒரு பெரிய பட்ஜெட் படத்துல இந்த நடிகை கமிட் ஆகியிருக்காங்க. அந்தப் படத்தோட டீசர், ட்ரெய்லர்னு எதுவுமே இன்னும் அதிகாரப்பூர்வமா வரல. ஆனா, அதுக்குள்ளயே படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து வர்ற தகவல்கள் எல்லாமே அனல் பறக்குது. படத்துல ஹீரோவுக்கு இணையா அம்மணிக்கு பவர்ஃபுல் ரோல்னுதான் சொல்லப்பட்டது. ஆனா, கதையில ட்விஸ்ட் என்னன்னா, படத்தோட ஓப்பனிங் சாங் மற்றும் சில முக்கியமான சீன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு எக்ஸ்ட்ரீம் கிளாமரில் நடிக்க சம்மதிச்சிருக்காங்களாம்.

South Actress Takes Bold Glamour Route for Career Comeback Industry Buzz Intensifies

எக்ஸ்ட்ரீம் கிளாமர்: "கதாநாயகியா இன்னொரு ரவுண்டு வரணும்னா கிளாமர்ல செஞ்சரி அடிக்கவும் நான் தயார்"னு இயக்குநரிடமே ஓப்பனா கிரீன் சிக்னல் காட்டியிருக்காங்க. படத்தின் காஸ்டியூம் டிசைனர் கொண்டு வந்த ஆடைகளின் அளவைப் பார்த்து படக்குழுவே மிரண்டப்போ, நடிகையோ "நோ ப்ராப்ளம், கேமரா ஆங்கிளை மட்டும் கச்சிதமா வச்சுக்கோங்க"ன்னு அசால்ட் பண்ணியிருக்காங்க.

இமேஜ்: முன்னணி நடிகர்கள் சிலர், "படம் ரிலீஸானதும் உங்க இமேஜ் என்னாகிறது?"ன்னு மெல்ல விசாரிச்சதுக்கு, "இமேஜை வச்சு என்ன பண்றது? இப்போதைக்கு மார்க்கெட்ல நிலைச்சு நிக்கணும், அதுக்கு இதுதான் ஒரே வழி"ன்னு கராறா சொல்லிட்டாங்களாம். நடிகையின் இந்த அதிரடி முடிவால பாலிவுட் தயாரிப்பாளர்கள் பலரும் இப்போ நடிகையின் கால்ஷீட்டுக்காக கியூவில நிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இந்த 'எக்ஸ்ட்ரீம்' ரிஸ்க் பட ரிலீஸுக்கு அப்புறம் கை கொடுக்குமா, இல்ல தலைகீழா மாறுமான்றதை பொறுத்திருந்துதான் பாக்கணும் என்ற பேச்சும் ஓடிக் கொண்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X