நடிகையுடன் மனம் விட்டு பேச பாலிவுட் நடிகருக்கு ரூம் போட்டுக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்?
ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர்களுக்கு லட்சங்களில் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலேயே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தது. இப்படியான நிலையில் பாலிவுட்டிலும் படம் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் பாலிவுட்டில் அப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருந்த ஸ்டார் நடிகர்களில் ஒருவரை அணுகியுள்ளது.

கதாநாயகியுடன் மீட்டிங்: அந்த ஸ்டார் நடிகரும் கதையை கேட்டு விட்டு படத்தில் நான் நடிக்கிறேன். எனக்கு ஓகே தான் எனக் கூறி அட்வேன்ஸ் வாங்கியுள்ளார். கதாநாயகி யார் என கேள்வி கேட்டுள்ளார். தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் கதாநாயகி ஒருவர் இருக்கிறார், அவரையே இந்த படத்தில் நாங்கள் புக் செய்ய திட்டமிருக்கிறோம் என கூறியுள்ளனர். இதைக் கேட்ட அந்த பாலிவுட் ஸ்டார் நடிகர், அந்த நடிகை உடன் எனக்கு ஒரு மீட்டிங் ரெடி செய்யுங்கள், நான் கொஞ்ச நாளில் சென்னைக்கு வருவேன் அப்போது அந்த நடிகையை சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட தயாரிப்பு நிறுவனம் மீட்டிங் தானே ஏற்பாடு செய்து விடலாம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை திரும்பி உள்ளது.
சென்னை வந்த பின்னர் சம்பந்தப்பட்ட நடிகையிடம் இது தொடர்பாக பேசிய தயாரிப்பு நிறுவனம் ”நீ ஒன்னும் பயப்படாதமா. நாங்க கூட தான் இருப்போம். அவர் பெரிய நடிகர் அப்படிங்கறதெல்லாம் நினைச்சு பயப்பட்டுவிடாதே. நல்லா தைரியமா பேசு எனக்கூறி நடிகையுடன் அந்த பாலிவுட் ஸ்டார் நடிகருடன் மீட்டிங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.
மனம் விட்டு பேசவேண்டும்: சென்னையின் பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இந்த இந்த மீட்டிங்கில் தயாரிப்பு நிறுவனத்தினரும் நடிகையும் அந்த பாலிவுட் ஹீரோவும் இருந்துள்ளனர். சரி நான் நடிகையுடன் கொஞ்சம் தனியாக பேச வேண்டும், நீங்கள் எல்லாம் அறையில் இருந்து வெளியேறுங்கள் என்று நடிகர் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட தயாரிப்பு நிறுவனத்தினரோ அதிர்ந்து போனார்கள். இல்லை.. இல்லை.. நாங்கள் இங்கு தான் இருப்போம். எங்கள் முன்னே நீங்கள் நடிகையிடம் பேசுங்கள் என அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு நடிகரோ, இல்லை நான் அவர்களுடன் நன்றாக மனம் விட்டு பேச வேண்டும். நீங்கள் இருந்தால் அது அவ்வளவு சௌகரியமாக இருக்காது. எனவே நீங்கள் அறைக்கு வெளியே போங்கள் எனக் கூறியுள்ளார்.
ஒன்றரை மணி நேரம்: இதைக் கேட்டு நடிகை ஒரு நிமிடம் படபடத்துப் போக, நடிகையிடம் தயாரிப்பு நிறுவனத்தினரோ நீ ஒன்னும் பயப்படாதம்மா, நாங்க ரூமுக்கு வெளியே தான் நிக்கிறோம் எனக்கூறி அறையில் இருந்து வெளியேறி உள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரமாக அறைக்கு வெளியே தயாரிப்பு நிறுவனத்தினரும் அறைக்கு உள்ளே அந்த பாலிவுட் ஹீரோவும் தென்னிந்திய நடிகையும் இருந்துள்ளனர். ஒன்றரை மணி நேரம் நடிகையுடன் நன்றாக மனம் விட்டு பேசிய பாலிவுட் ஹீரோ, நான் மும்பைக்கு போயிட்டு உங்களுக்கு டேட் கொடுக்கிறேன் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய தயாரிப்பு நிறுவனம் நடிகர் மும்பை சென்ற பின்னர் அவரை அணுகியுள்ளது. அதற்கு அவரோ இல்லை இந்த நடிகை வேண்டாம். வேற நடிகை புக் செய்யுங்கள். இந்த நடிகை எனக்கு செட் ஆக மாட்டாங்க என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











