பண்டிகை தினத்திற்கு முன்னாடியே ரிலீஸ்.. காரணம் அந்த பயம் தானாம்!

கதை திருட்டு பிரச்னை காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பண்டிகை தினத்திற்கு முன்னாடியே ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளதாம்.

சென்னை: மாஸ் ஹீரோவின் விளையாட்டு படம் பண்டிகை தினத்தன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பண்டிகை தினத்துக்கு இரு தினங்களுக்கு முன்பே வெளியிடப்படுகிறது.

இதற்கு காரணம் அந்த படத்தின் மீது கதை திருட்டு வழக்கு போடப்பட்டுள்ளதால், கடைசி நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாத சிக்கல் ஏற்பட்டு ஒரு நாள் ரிலீஸ் தள்ளி போனாலும், பண்டிகை நாளுக்குள் வெளியாகிவிடும் என்ற பலே திட்டத்தில் தான் படக்குழு இப்படி ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதாம்.

பிரம்மாண்ட பட்ஜெட்

பிரம்மாண்ட பட்ஜெட்

தனது குருநாதருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பட்ஜெட் படம் என்ற அந்தஸ்த்தோடு அதிக பொருட்செலவில் அந்த விளையாட்டு படத்தை எடுத்துள்ளார் அந்த மூன்றெழுத்து இயக்குநர்.

பட்ஜெட்டை தாண்டி லாபத்தை சம்பாதிக்க பல தரப்பு விளம்பர யுக்திகளையும் படத்தயாரிப்பு தரப்பும் இயக்குநரும் செய்து வந்தாலும், அவர்கள் நினைத்த அளவிற்கு படத்திற்கான விளம்பரம் இன்னும் சேர வேண்டிய இடங்களுக்கு சென்று சேரவில்லையாம்.

பலே ஐடியா

பலே ஐடியா

விளையாட்டு படத்தின் ரிலீஸ் தேதியை பண்டிகை அன்று வெளியிடாமல், அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கு காரணம் கதை திருட்டு வழக்கு எழுந்துள்ள நிலையில், படத்தை திட்டமிட்டபடி பண்டிகை தினத்தன்று வெளியிட நினைத்து, அது சொதப்பினால், மொத்த வியாபாரமும் பாதிக்கும் என்பதால், முன்கூட்டியே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக நேர்ந்தால் கூட பண்டிகைக்குள் எப்படியாவது படம் ரிலீஸ் ஆகிவிடும் என்பதே அவர்களின் பலே ஐடியாவாம்.

ஈஸியா ஏமாற்றலாம்

ஈஸியா ஏமாற்றலாம்

பழைய தமிழ் பட கதைகளையே ரீடச் செய்து புது கலர் கொடுத்து பிளாக்பஸ்டர் கொடுக்கும், இயக்குநரை வைத்து பாலிவுட்டில் தானும் கல்லா கட்டலாம் என அந்த கான் நடிகர் முடிவு செய்தே இவருக்கு பாலிவுட் வாய்ப்பை வழங்கியுள்ளாராம்.

உள்ளூரிலே ரசிகர்களை ஏமாற்ற முடிந்த ஜித்து இயக்குநரால், நம்மூர் மக்களை ஈஸியா ஏமாற்றலாம் என்பதே இந்த அதிரடி கூட்டணிக்கான அஸ்திவாரம் என்ற தகவலும் காற்றில் பரவி வருகிறது.

எதிர்ப்பார்த்த விளம்பரம் இல்லை

எதிர்ப்பார்த்த விளம்பரம் இல்லை

இதற்கு முன் வெளியான இந்த கூட்டணியின் படத்திற்கு தேசிய கட்சியின் விளம்பரம் பக்க பலமாக இருந்தது. இந்த முறை இன்னும் அதிக பட்ஜெட் என்பதால், இசை நிகழ்ச்சியில், நேரடியாக ஆளுங்கட்சியையே ஆட்டிப் பார்த்தார் அந்த மாஸ் ஹீரோ.

ஆனால், ஆரம்பத்தில் அவசரபட்டு வாய்விட்ட ஒரு சில அமைச்சர்களை தலைமையிடம் உடனடியாக கண்டித்து வாய்ப்பூட்டு போட்டுவிட்டதால், அதற்கு பின்னர், எதிர்பார்த்த அளவிற்கான நெகட்டிவ் பப்ளிசிட்டி அந்த விளையாட்டு படத்திற்கு கிடைக்காமல் போய்விட்டது. இதனால், படத்தின் வசூல் பாதிக்கும் சூழலும் உருவாகியுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X