»   »  கோபிகாவை "கட் செய்த ஸ்ரீகாந்த்

கோபிகாவை "கட் செய்த ஸ்ரீகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்நேகாவுடன் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டு விட்டதால் கோபிகாவுக்கு டாட்டா காண்பித்து விட்டாராம் ஸ்ரீ நடிகர்.

பிரிக்க முடியாதது எதுவோ என்று இப்போது தருமி கேட்டால், அதற்கு ஸ்ரீகாந்தும் கிசுகிசுவும் என்று பதில் கூறிவிடலாம். அந்தஅளவிற்கு அதாவது கோலிவுட்டில் வேறு எந்த நடிகரும் சிக்காத அளவிற்கு இவர் கிசுகிசுவில் அடிபட்டு வருகிறார்.

முதலில் தனது முதல் ஜோடியான பூமிகாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். சிறிது காலம் இந்தக் கதை ஓடியது. இதன் பிறகு நட்புநடிகையுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்து சில படங்களில் சேர்ந்து நடிக்க "அன்பும் கூடவே வளர்ந்தது.

இருவரது நெருக்கத்தையும் பார்த்து கோலிவுட்டே பொறாமைப்பட்டது. விரைவில் இருவருக்கும் கெட்டி மேளம் கொட்டப்போகிறது என்று கூட கூறினார்கள்.

ஆனால் இடையில் யார் கண் பட்டதோ, இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய உரசலால் இடைவெளி ஏற்படத் தொடங்கியது.எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தார்களோ, அந்த அளவிற்கு இருவரும் விலகி, விலகி செல்லத் தொடங்கினார்கள்.

இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு ஸ்ரீகாந்தின் வலைக்குள் விழுந்தார் கோபிகா. கனா கண்டேன் படத்தில்இருவரும் மிக மிக நெருக்கமாக நடித்தது பலரது கண்களையும் உறுத்தியது.

இது தான் சமயம் என்று கருதி கோபிகாவும் ஸ்ரீகாந்துடனான தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார். இதனால்வெறுப்படைந்த ஸ்னேகாவும் தனது பாய் பிரண்டை மாற்றினார். தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ஏபிசிடி படத்தின்டைரக்டர் சரவண சுப்பையாவுடன் நெருக்கமானார்.

இருவரும் தங்களது ஜோடியை மாற்றி விட்டதால் இப்போதைக்கு இருவருக்கும் இடையே நட்பு மலர வாய்ப்பில்லை என்றேபலரும் கருதினர். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாகி விட்டது.

மீண்டும் காந்த நடிகரும், நட்பு நடிகையும் நகமும், சதையும் போல ஆகிவிட்டார்களாம். இந்த நெருக்கத்தால்கோபிகாவுடனான நட்பை துண்டித்து விட்டாராம் ஸ்ரீகாந்த்.

ஒரு படத்தில் நடித்ததோடு சரி, அதற்குப் பிறகு அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்கிறது ஸ்ரீகாந்தின் நட்புவட்டாரம்.

இப்படி அடிக்கடி உங்களைச் சுற்றியே கிசுக்கள் கிளம்புகிறதே, ஏன் இப்படி? என்று ஸ்ரீகாந்திடம் கேட்டோம். எனக்கு தனிமைபிடிக்காது. எப்போதும் எல்லோரும் நண்பர்கள் என்று நாலு பேரோடு நட்பு கொள்கிறேன்.

நண்பர்கள் நிறைய வேண்டும் என்று விரும்புகிறேன். எனது இந்த நட்புக்கு மரியாதை தரும் குணமே கிசுகிசுக்கள் வரகாரணமாய் அமையலாம். என்னடா இப்படி என்று ஆரம்பத்தில் இது குறித்து வருந்தினேன்.

இப்போது என் மனம் மாறிவிட்டது. இந்த வயதில் என்னைப் பற்றி பேசாமல் 60 வயதிலா பேசப்போகிறார்கள் என்றஸ்ரீகாந்திடம் சரி எப்போ தான் உங்களுக்கு கல்யாணம் என்று வாயைக் கிண்டினோம்.

எனக்கு இப்போது 26 வயது தான் ஆகிறது. அதற்குள் என்ன அவசரம்? கல்யாணம் என்பது மிகப் பெரிய விஷயம். அதற்குஇந்த வயது போதாது என்று நான் நினைக்கிறேன். அதற்கு சரியான நேரம் வந்தவுடன் அப்பா, அம்மா பார்க்கும் பெண்ணைசத்தம் காட்டாமல் கட்டிப்பேன் என்றார்.

எப்படியோ நம்பினவரை கைவிட்டிராதீங்க!

Read more about: srikanth and gossips

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil