ஒரே ஒரு கண்டிஷன் தான்.. அதுக்கு ஃபுல் ஃப்ரீடம் தந்த உச்ச நடிகர்.. டக்குன்னு ரெடியான ஸ்க்ரிப்ட்!

By Staff

சென்னை: நல்ல கதை யோசிக்கிறேன், சீன் யோசிக்கிறேன் என அந்த ட்ரோல் படத்தைக் கொடுத்த காமெடி இயக்குநருக்கு உச்ச நடிகர் கொடுத்த ஃபுல் ஃப்ரீடம் காரணமாக அதிரடியாக ஸ்க்ரிப்ட் பணிகள் முடிந்து விட்டதாம்.

காலம் பொன் போன்றது என்பதை நன்கு அறிந்தவர் அந்த உச்ச நட்சத்திரம். ஆனால், ஜாலியாக நண்பர்களுடன் லூட்டி அடிப்பதையே வேலையாக பார்த்துக் கொண்டு படம் இயக்கி வரும் அந்த இயக்குநர் மேலும், கால தாமதம் செய்வதை அறிந்து திடீரென அவரை கூப்பிட்டு அந்த விஷயத்தை சொல்ல, அதிரடியாக ஸ்க்ரிப்ட் வொர்க்கை முடித்து விட்டாராம்.

கூடிய விரைவிலேயே படப்பிடிப்பையும் ஆரம்பிக்கும் பணிகளையும் உச்ச நடிகரே இந்த முறை தீவிரம் காட்டி செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

காப்பி கதை

காப்பி கதை

இயக்குநர் ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடித்து தன் தலையிலும் அதே மசாலாவை தடவ பார்த்த நிலையில், தடுத்த உச்ச நடிகர் எவ்வளவு நேரம் வேண்டுமானால் எடுத்துக்கோங்க, நல்ல கதையை ரெடி பண்ணுங்க என ஆரம்பத்தில் உத்தரவு போட்டு இயக்குநருக்கு அனைத்து ராஜ ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால், புதுசா யோசிக்க முடியாத நிலையில், காலத்தை காராச்சேவு போல இஷ்டத்துக்கு இயக்குநர் சாப்பிட்டு வந்த நிலையில், உச்ச நடிகர் டென்ஷன் ஆகி விட்டாராம்.

ஃபுல் ஃப்ரீடம்

ஃபுல் ஃப்ரீடம்

ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்.. பாடுற மாட்டை பாடி கறக்கணும் என்கிற வித்தையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாராம் அந்த உச்ச நடிகர். இந்நிலையில், புதுசா எதையும் யோசிக்க போறது இல்லை.. எதுவேண்டுமானாலும், பண்ணிக்கோ, எந்த சர்வதேச படத்தை வேண்டுமானாலும், காப்பி அடித்து ஸ்க்ரிப்ட்டுக்குள் கொண்டு வந்துடு கதையை சீக்கிரம் முடி என ஆர்டர் போட்ட நிலையில், உற்சாகமடைந்த இயக்குநர் சட்டுபுட்டுன்னு ஸ்க்ரிப்ட்டை முடித்து விட்டாராம்.

ஒரே கண்டிஷன்

ஒரே கண்டிஷன்

கதை எல்லாம் இப்போதைக்கு யாரும் பார்ப்பதில்லை. படம் ஓடுற 2.30 மணி நேரமும் பரபரப்பா இருக்கணும். ஸ்லோவா தான் எடிட்டிங் பண்ணுவேன்.. லேக் வச்சாத்தான் சீன் புரியும்னு பழையபடி பஞ்சாங்க கதை பேசாம, அடுத்த நொடி ஸ்க்ரீன்ல என்ன நடக்குதுன்னு புரியாமல் போயிக்கிட்டே இருந்து கிளைமேக்ஸ்க்கு கொண்டு போயிடுன்னு ஒரே ஒரு கண்டிஷன் தான் உச்ச நடிகர் போட்டாராம். அதற்கு ஏற்றவாறு ஏகப்பட்ட ஹிட்டான சர்வதேச படங்களின் காட்சிகளை அழகாக எடிட் செய்து ஸ்க்ரிப்ட்டுக்குள் இன்சர்ட் செய்து விட்டாராம் அந்த காமெடி இயக்குநர்.

பந்தயம் அடிக்கணும்

பந்தயம் அடிக்கணும்

உச்ச நடிகர் என பெயர் அளவில் மட்டுமே இருக்கக் கூடாது என்றும், மீண்டும் இந்த கோலிவுட்டுக்கே தான் யாரு என்பதை வெயிட்டாக காட்ட வேண்டும் என்றும் தனக்கு போட்டியாக வந்து நிற்கும் தனது நண்பருக்கு டஃப் கொடுத்து பந்தயம் அடிக்கணும் என ஒட்டுமொத்தமாக களத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அந்த உச்ச நடிகரே இறங்கி வேலை செய்து வருகிறாராம். விட்டா, அவரே படத்தை இயக்கியும் விடுவார் போல தெரிகிறது என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X