அந்த ஹீரோவுக்கே மங்காத்தா காட்டும் மாஸ் நடிகர்.. உச்ச நடிகருடன் சண்டை எல்லாம் செட்டப் தானா?
சென்னை: தனக்கு போட்டியாக டாப் நடிகர் இருந்து வந்த நிலையில், தன்னுடைய போட்டியாளரையே மாற்றி மாஸ் நடிகர் மங்காத்தா ஆடி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சினிமாவில் பல ஆண்டுகளாக பல நடிகர்கள் நடத்தி வந்த அதே காக்கை சித்தர், டான்ஸ் சித்தர் டிராமாவைத் தான் உச்ச நடிகரும் மாஸ் நடிகரும் போட்டு மக்களிடம் இருந்து பணத்தை ஒட்டுமொத்தமாக அள்ளி வருவதாக கூறுகின்றனர்.
தங்கள் நடிகர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தேறாத படத்திற்கு முதல் நாளே டிக்கெட்டுக்கு நாயாக அலையும் நிலைமையில் தான் ரசிகர்கள் இருப்பதாகவும் அதை வைத்து தான் மாஸ் நடிகரும் உச்ச நடிகரும் இந்த ஆண்டு சரியான மங்காத்தா கேம் விளையாடி விட்டனர் என சினிமா பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.
ரசிகர்களை ஏமாற்றவே சண்டை: நடிகர்கள் நேரடியாக எப்போதுமே சண்டை போட மாட்டார்கள். அதே போல அவர்கள் மறைமுகமாக போடும் சண்டையும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவிக்கத்தானே தவிர வேறு எதற்காகவும் இல்லை என்பதை இத்தனை காலம் ஆகியும் ரசிகர்கள் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்களா? அல்லது அவர்களும் சேர்ந்து பிக் பாஸ் கேம் போல விளையாட்டை ரசித்து வருகின்றனரா? என்பதே கேள்விக்குறியாகவே இருக்கிறது. ரசிகர்களை கடைசி வரை குழப்பத்திலேயே வைக்க டபுள் ஸ்ட்ராண்டடாகவே இவர்கள் சண்டை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அடிப்பது போல அடிக்கிறேன்: நான் உன்னை அடிப்பது போல அடிக்கிறேன்.. நீ அழுவது போல அழு.. நீ என்னை திருப்பி அடி.. இதை பார்த்துட்டு நம்ம ரெண்டு பேர் படமும் கல்லா கட்டி விடும். முடிஞ்ச அளவுக்கு உனக்கு நானும் எனக்கு நீயும் நெகட்டிவ் பப்ளிசிட்டி செய் பாவம் இந்த முட்டா பசங்களுக்கு அதெல்லாம் தெரியாம ஃபயர் விட்டு பல ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி முதல் நாளே தேறாத படத்தை இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து விடுவார்கள் என பக்காவாக பிளான் போட்டு மங்காத்தா கேம் ஆடியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த நடிகருக்கே மங்காத்தா: இதில் வேடிக்கை என்னவென்றால் மாஸ் நடிகரும், உச்ச நடிகரும் சமீபத்தில் ஆடி வரும் அந்த விளையாட்டால் கடைசியில் மார்க்கெட் இழந்தும் போட்டி இழந்தும் நிற்பது அந்த டாப் நடிகர் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











