சத்தமே இல்லாமல் நடக்கும் சம்பவம்.. பாஸ் நடிகரை தொடர்ந்து உச்சத்துக்கும் கதை ரெடி பண்ணும் இயக்குநர்!
சென்னை: குறைவான பட்ஜெட்டில் தரமான படத்தை எப்படி செய்வது என தொடர்ந்து கிளாஸ் எடுத்து வருகிறார் அந்த இளம் இயக்குநர்.
தொடர்ந்து வெற்றியை ருசித்து வரும் அந்த இயக்குநரிடம் தனக்கும் ஒரு கதையை தயார் செய்ய சொல்லியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பாஸ் நடிகர் தனது நண்பருக்குத் தனியாக படத்தை போட்டுக் காட்ட மிரண்டே போய்விட்டாராம் அந்த உச்ச நடிகர்.

படம் பார்த்த உச்ச நடிகர்
படம் ரிலீசாவதற்கு முன்பே உச்ச நடிகருக்கு படத்தை போட்டு காத்திருக்கிறார் பாஸ் நடிகர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தை பார்த்து தனது நண்பரையும் படத்தில் நடித்த நடிகர்களையும் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி இருக்கிறாராம். மேலும், இயக்குநரை தனியாக அழைத்தும் உச்ச நடிகர் பேசியிருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

எனக்கு ஒரு கதை
பாஸ் நடிகரின் வயதையும் உடல் நலத்தையும் கவனத்தில் கொண்டு கவனமாக படம் முழுக்க அவரது மாஸுக்கு கொஞ்சமும் குறைவு வராமல் எடுத்ததை பார்த்து மிரண்டு போன உச்ச நடிகர், இத்தனை நாளாக உன்னைப் போல் ஒருவரைத் தான் தேடிட்டு இருந்தேன். எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க பண்ணுவோம்னு சொல்லி உள்ளாராம்.

இயக்குநர் ஹேப்பி
உச்ச நடிகரிடம் இருந்து இப்படியொரு வாழ்த்து கிடைத்ததும் இயக்குநர் ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளாராம். அடுத்து மாஸ் ஹீரோவுக்கு ஒரு படம் பண்ணிவிட்டு, மீண்டும் பாஸ் நடிகருடன் இணைய திட்டமிட்டுள்ள அந்த இயக்குநர் உச்ச நடிகரின் விருப்பத்தை கேட்டதும் விரைவில் அவருக்கு ஒரு கதையை பண்ண முடிவெடுத்து அதற்கான பணிகளை தனது குழுவுடன் இணைந்து பண்ண ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அதுமட்டும் வேண்டாம்
தொடர்ந்து முன்னணி நடிகர்களை இயக்கும் அந்த இயக்குநர் குறிப்பாக அவர்கள் போதைக்கு அடிமைப் போல காட்டி வருவதை நோட் பண்ண உச்ச நடிகர், அந்த போர்ஷன் மட்டும் வேண்டாம், மற்றபடி உங்க இஷ்டத்துக்கு படம் பண்ணுங்க எந்த தலையீடும் இருக்காது. இனிமேல், அதெல்லாம் செட் ஆகாது என சிரித்துக் கொண்டே சொல்ல, இயக்குநரும் சிரித்து ஓகே சொல்லி விட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அப்போ அந்த இயக்குநர்
அடுத்த படத்தை அந்த காமெடி இயக்குநருடன் கமிட் ஆகியுள்ள நிலையில், அதற்கு அடுத்த படத்திற்கான இயக்குநரை இறுதி செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளாராம் உச்ச நடிகர். மேலும், சில இயக்குநர்களிடமும் கதையை ரெடி பண்ண சொல்லி உள்ள நிலையில், அடுத்த படத்தின் ஜாக்பாட் யாருக்கு அடிக்கப்போகுதோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











