மனைவியின் டார்ச்சர்.. பெரிய மனசை இழந்த ஸ்டார் நடிகர்?... வெறுப்பேற்ற மாஸ் நடிகர் காட்டிய வேலை!
சென்னை: வரிசையாக மாஸ் நடிகரை மற்ற நடிகர்கள் சந்தித்து வரக் காரணமும் தொடர்ந்து அவர் அனுமதி வாங்கி வருவதற்கு பின்னணியிலும் ஸ்டார் நடிகரை வெறுப்பேற்றும் விஷயம் தான் உள்ளது என பிரபலம் ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார்.
பாஸ் நடிகருக்கு இருக்கும் பெருந்தன்மை காரணமாகத்தான் அவர் மாஸ் நடிகரை நேரில் சந்தித்து ஆசி வழங்கி வந்தார் என்றும் தோற்றவரை சென்று சந்திக்க நேரம் இருந்த உங்களுக்கு வாழ்த்து சொல்ல பெரிய மனசு இல்லாமல் சுருங்கிப் போனது ஏன் என பிரபலம் ஒருவர் நடிகரிடமே கேட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

அத்தனைக்கும் காரணமே நடிகரின் மனைவி கொடுக்கும் டார்ச்சர் தான் என்றும் அவரை தாண்டி இவரால் எதுவும் பேசவோ, செய்யவோ முடியாத சூழல் தான் இத்தனை பஞ்சாயத்துக்கும் காரணம் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
வெறுப்பேற்றும் மாஸ் நடிகர்: ஆனால், மாஸ் நடிகருக்கோ தன் மீது உள்ள பொறாமை காரணமாக ஸ்டார் நடிகர் தான் இப்படியொரு வேலையை தனக்கெதிராக பார்த்து வருகிறார் என்றும் தான் அந்த இடத்தை பிடித்து விடக் கூடாது என்பதற்காக பலே வேலைகளையும் ஸ்டார் நடிகர் பார்த்துள்ளார் என நினைத்துக் கொண்டு அவரை வெறுப்பேற்றவே தொடர்ந்து பல பிரபலங்கள் தன்னை வந்து சந்திக்கும் காட்சிகளை வெளியிட்டு வருகிறார் என்கின்றனர்.
மனைவியின் பேராசை: இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போ திடீரென மனைவி விஸ்வரூபம் எடுக்க காரணமே அவரது பேராசை தான் என்றும் தனது கணவரின் பெயரையும் புகழையும் வைத்து அடுத்தவர்கள் சம்பாதிப்பதை விட நாமே அதை அறுவடை செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளார் என்று கூறுகின்றனர். ஆனால், இதில், நடிகருக்கு பெரிதும் உடன்பாடு இல்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அமைதி காத்து வருகிறார் என்கின்றனர். நடிகருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டார் நடிகரும் தொடர்ந்து சில பல ஆட்களை சந்திக்க காரணமும் இதுதான் என்கின்றனர்.
தொடர் சொதப்பல்: மாஸ் நடிகரை பகைத்துக் கொள்வதற்கு முன்பு வரை ஸ்டார் நடிகருக்கு சினிமாவில் அதிர்ஷ்டம் அடித்து வந்த நிலையில், அவரை பகைத்துக் கொண்ட பின்னர் தொடர்ந்து ஃப்ளாப் தான் என்கின்றனர். மேலும், நடிகரின் புதிய படம் தொடர்ந்து காலதாமதம் ஆவதற்கும் இவர்களது ஈகோ சண்டை தான் காரணம் என்கின்றனர். இருவரும் ஒருமுறை சந்தித்து பேசி விட்டால் அனைத்துக்கும் எண்ட் கார்டு போடப்படும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications