அப்பா இருக்குற துணிச்சல்.. செட்டில் அராஜகம் செய்யும் மகள்.. அடுத்து அடுத்து கிளம்பும் பிரபலங்கள்?
சென்னை: கணவரை பிரிந்த மகளுக்காக பரிதாபப்பட்டு ஒரு படத்தில் அப்பா நடிகர் நடித்து வருகிறார். ஆனால், இந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டு டாப் இயக்குநராக மகள் வருவார் என பார்த்தால் மீண்டும் பழைய குருடி கதவை திறடி கதையாகவே அவரது நடவடிக்கை செட்டில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
தனது பிடிவாத குணம் காரணமாவே தோளுக்கு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போதே விவாகரத்தை அறிவித்து அதிர்ச்சியை கிளப்பினார் அந்த பிரபல நடிகரின் மகள்.
எப்படியாவது பெரிய ஆளாக மாறி தனக்கான பெயரை நிலைநாட்ட வேண்டும் என கடும் முயற்சிகளை ஏகப்பட்ட சிபாரிசுகளை வைத்து செய்து வருகிறார்.

சொகுசு வாழ்க்கை
பிரபல நடிகரின் மகள் என்பதால் சிறு வயது முதலே சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மகளுக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியல என்றும் அடுத்தவர்களின் கஷ்டத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகிறார் என செட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிரபலத்தை பற்றிய பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

அப்பா தயவால்
இந்த வயதிலும் மனைவியே தெய்வம் என தன்னைப் போல இருக்கும் ஒரு மாப்பிள்ளையை பார்த்து கட்டிக் கொடுக்க முடியவில்லையே என வருத்தமடைந்த அந்த அப்பா நடிகர் மகளுக்காக கடைசியாக இந்த ஒரு விஷயத்தையாவது செய்யலாம் என நினைத்து நடிக்க ஒப்புக் கொள்ள அப்பாவின் தயவால் தனது அடுத்த இன்னிங்ஸை அந்த பிரபலத்தின் மகள் ஆரம்பித்துள்ளார்.

ஒண்ணுமே ஓடல
இதுக்கு முன்பாகவே சில முறை பல கோடிகளை செலவு செய்து மகள் பண்ண அட்டகாசங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்தன. போதாக் குறைக்கு கணவர் இன்னொரு நடிகையுடன் மனைவி தயவாலே நெருக்கமானது தான் மிச்சன் என சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில், மீண்டும் தனது வித்தைகளை இறக்க காத்திருக்கிறார் அந்த பிரபலத்தின் மகள்.

மிரட்டும் தொனி
அப்பா இருக்கும் தைரியத்தில் செட்டில் தான் தான் எல்லாம் என்பது போல டெக்னீஷியன் முதல் நடிகர்கள் வரை அனைவரையும் மிரட்டி வருகிறாராம் அந்த வாரிசு. கன்டென்ட் இல்லாமல் சும்மா கத்தினால் மட்டும் எப்படி வேலை ஆகும் என ஏற்கனவே அவரின் நடவடிக்கை பிடிக்காமல் சில தொழில்நுட்பக் கலைஞர்கள் டாட்டா காட்டி விட்டு சென்று விட்டனர்.

நடிகருக்கே பிடிக்கவில்லையாம்
பெரிய பேனர், உச்ச நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு என ஆசை ஆசையாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அந்த இளம் நடிகருக்கே செட்டில் அந்த பிரபலத்தின் மகள் செய்யும் சேட்டைகள் சுத்தமாக பிடிக்கவில்லையாம். மேலும், நடிகருக்கு கொஞ்சம் கூட மரியாதையே கிடைக்காததால் படத்தில் இருந்தே விலகும் முடிவுக்கே வந்து விட்டாராம்.

கூல் பண்ண சக நடிகர்
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அவங்களே புரிஞ்சிப்பாங்க என சக நடிகர் சொன்னதால் கூல் ஆகி விட்டாராம் அந்த நடிகர். ஆனால், பிரபலத்தின் மகள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தால் இன்னும் யாரெல்லாம் வெளியேறுவார்கள் என தெரியவில்லை என கோடம்பாக்கம் கோடாங்கி புலம்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications











