கொரோனாவுக்கு கம்மியா கொடுத்தவரு.. இப்ப அள்ளி அள்ளி கொடுக்க அதுதான் காரணமாம்!
சென்னை: அந்த பிரபல நடிகரின் படம் ரிலீசாகவுள்ள நிலையில், எதிர்ப்புகள் ஏதும் கிளம்பக் கூடாது என்பதற்காக பலருக்கும் செட்டில் செய்து வருகிறாராம்.
மற்ற டாப் ஹீரோக்கள் படங்களை வெளியிட தயக்கம் காட்டி வரும் நிலையில், அந்த பிரகாச நடிகர் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்கிற பழமொழிக்கு ஏற்ப முடிவெடுத்துள்ளார்.
அவருக்கு எதிராக ஏகப்பட்ட இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், தன் பக்கம் ஆதரவாக பேச சில பிரபலங்களை தயார் செய்து கொள்ளத் தான் இப்படி பணத்தை வாரி இரைத்து வருகிறாராம்.

தொடர் ஃபிளாப்
சில ஆண்டு காலமாகவே அந்த நடிகரின் படங்கள் தொடர்ந்து ஃபிளாப் கொடுத்து வருவது கோலிவுட்டுக்கே தெரிந்த விஷயம். தானும் உச்ச நட்சத்திரம் ஆகிவிட வேண்டும் என மாஸ் படங்களிலும், மசாலா படங்களிலும் நடித்து வந்த அவருக்கு அந்த ஏரியாவில் சோபிக்க முடியவில்லை.

பழையபடியே
அதனால், உடலை வருத்தி, நடிப்பில் அசத்தி ஒரு ஹிட்டாவது கொடுத்து விட வேண்டும் என பழையபடியே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்வு செய்துள்ளார். ஆனால், இந்த படம் வணிக ரீதியாக வெற்றியடையுமோ அடையாதோ என்ற பயம் அப்போதில் இருந்தே அவருக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டிப் போட விரும்பவில்லை
அதனால், தான் அந்த மாஸ் நடிகரின் படத்தோடு இந்த முறையும் போட்டிப் போட வேண்டாம் என்ற தனது நிலைப்பாட்டில் இருந்தார். ஆனால், அதற்குள் கொரோனா வந்து எல்லோருடைய கனவுகளிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டு சென்று விட்டது. கடன் சுமை அதிகரிக்கவே இப்போ வேறு வழியில்லாமல் இந்த முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.

கோடிகளில் செலவு
இந்த பெரிய மீனை பிடித்து விட்டால் மற்ற திமிங்கலங்களையும் மடக்கி விடலாம் என கார்ப்ரேட் நிறுவனங்கள் பின்னிய சதி வலைக்குள் அந்த பிரகாச நடிகர் தற்போது சிக்கி விட்டார். ஆனால், எதிர்ப்புகள் கிளம்பினால், தன் பக்கம் ஆதரவுக்கு சில பேர் நிற்க வேண்டுமே, பேசும்படி ஏதாவது செய்ய வேண்டுமே என எண்ணியே தற்போது கோடிகளில் உதவி செய்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











