நஷ்டத்துக்கா படம் நடிக்கணும்.. தயாரிப்பு நிறுவனத்தை வச்சு செய்த உச்ச நடிகர்.. செம அடி போல!

By Staff

சென்னை: உச்ச நடிகரை அந்த தயாரிப்பு நிறுவனம் பயங்கர கடுப்பில் ஆழ்த்தியது தான் இயக்குநரையே குழப்பி இப்படியொரு படத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

உச்ச நடிகரை வைத்து அந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே எடுத்த படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில், அந்த நஷ்டத்தை ஈடுகட்டவே மீண்டும் நடிகரின் கால்ஷீட்டை தயாரிப்பு நிறுவனம் கேட்டு நச்சரித்துள்ளது.

gossip kollywood actor gossip

தயாரிப்பு நிறுவனத்தின் தொல்லையை சமாளிக்க முடியாத நிலையில் தான் உச்ச நடிகர் உடனடியாக ஒரு படத்தை பண்ணி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் ஆளாகி இந்த புராஜெக்ட்டுக்குள் வந்தார் என்கின்றனர்.

விருப்பமே இல்லை: உச்ச நடிகருக்கு அவருக்கு ஏற்ற சம்பளத்தைக் கூட கொடுக்காமல் கண்டிஷன் அப்ளை பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடந்துக் கொண்டது நடிகரை ரொம்பவே கோபப்படுத்தி விட்டதாக கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விருப்பமே இல்லாமல் இப்படியொரு கதையை தேர்வு செய்து நடித்து கொடுத்திருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.

தொடரும் பிரச்சனை: உச்ச நடிகருக்கு மட்டுமின்றி பல்வேறு முன்னணி நடிகர்களையும் அந்த கார்ப்பரேட் நிறுவனம் ஆட்டிப் படைக்க நினைத்து கடைசியில் ஆட்டம் கண்டது தான் மிச்சம் என்கின்றனர். தொடர்ந்து நடிகர்களுடன் சம்பள விஷயத்தில் அதிக சண்டைகளை அந்த நிறுவனத்தை சேர்ந்த சிலர் போட்டது தான் பல்வேறு சிக்கல்களை சந்தித்து தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து நஷ்டங்களை சந்தித்து வரக் காரணமே என்கின்றனர்.

இயக்குநரை குழப்பி: எப்படியும் இந்த படம் பெரிதாக ஹிட் அடிக்கக் கூடாது என்கிற கணிப்புடனே சிக்கனமான பட்ஜெட்டில் படத்தை உருவாக்கினாலும் இயக்குநரை அழைத்து அவரையே குழப்பி இந்த படத்தை பண்ணியுள்ளார் உச்ச நடிகர் என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் புரமோஷன்களும் பெரியளவில் செல்லாததற்கும் ரசிகர்கள் மத்தியில் ஹைப் குறைந்து காணப்படுவதற்கும் காரணமே நடிகர் போட்ட ஸ்கெட்ச் தான் என்கின்றனர்.

வாய்ப்பே இல்லை: நடிகரின் பெயருக்காகத் தான் கொஞ்சமாச்சும் படம் ஆரம்பத்தில் கலெக்‌ஷன் அள்ளும் என்றும் படம் வெளியானால் கண்டிப்பாக பெரிய வசூல் வேட்டைக்கு வாய்ப்பே இல்லை என்கிற டாக்குகள் தான் கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை கிளப்பி உள்ளன. இந்த முறையும் அந்த தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் வச்சு செய்து விட்டார் என்கின்றனர். அந்தளவுக்கு நடிகரை தயாரிப்பு நிறுவனம் டார்ச்சர் செய்தது தான் எல்லாவற்றுக்கும் காரணம் என கிசுகிசுத்து வருகின்றனர். இதில், எது உண்மை என்பது படம் வெளியானால் தான் தெரியும் என கோடம்பாக்கத்து டீ கடை பெஞ்சுகளில் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X