செகண்ட் சேனலை மாற்ற முடியாமல் தவிக்கும் நடிகர்.. பிசினஸ் பாட்னர்ஸ் கண் முன்னே அப்படியெல்லாம் நடக்குதாம்

By Staff

சென்னை: சினிமாவில் என்னதான் வாரிசுப் பின்னணி இருந்தாலும், ஆரம்பத்தில் தியேட்டரில் ஈயாடிய கதையெல்லாம் தாண்டி, இன்று பல கோடிகள் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தவர் அந்த வாட்டசாட்டமான நடிகர். நடிப்பில் பந்தயம் கட்டி ஜெயித்துவிட்டாலும், இல்லற வாழ்க்கையில் "செகண்ட் சேனல்" விவகாரத்தால் மொத்தமாகச் சரிந்துபோனார். மனைவி பிள்ளைகளைத் தவிக்கவிட்டு, அந்தப் பெண் பிரபலமே உலகம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் சொன்ன பேச்சைக் கேட்டு நடிகர் சமீபத்தில் பெரிய அளவில் பணத்தைக் கொட்டி ஒரு புது பிசினஸ் தொடங்கினார். சினிமா பிசினஸ் வேறு, இந்தத் தொழில் வேறு என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், இப்போது தொழிலில் சக்கை லாபம். பல கோடிகள் அசால்ட்டாகப் புழங்குகின்றன.

கல்லா கட்டும் புது பிசினஸ்.. ஆனால்?: பிசினஸில் லாபம் கொட்டினாலும், நடிகருக்கு ஒரு நிம்மதியும் இல்லை. காரணம், தொழிலை மாற்றினாலும் அந்த செகண்ட் சேனலின் ஆதிக்கத்தை அவரால் மாற்றவே முடியவில்லை. பிசினஸின் மொத்தக் கட்டுப்பாடும், வரவு-செலவு கணக்குகளும் அந்தப் பெண் பிரபலத்தின் கைக்குள்தான் இருக்கிறதாம். லாபப் பணம் அனைத்தும் நேரடியாக அவரது வங்கிக் கணக்கிற்குத்தான் போகிறதாம்.

Star Actor Embarrassed by Partner s Control Business Success Overshadowed by Personal Controversy

சமீபத்தில் இந்தத் தொழிலில் இணைந்திருக்கும் மற்ற பார்ட்னர்ஸ் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் நடந்த ஒரு மீட்டிங்கில், நடிகர் ஒரு முடிவைச் சொல்லப் போக, அந்தப் பெண் பிரபலம் அனைவரின் முன்னிலையிலும் நடிகரை அடக்கி வாசிக்கும்படி மிரட்டி விட்டாராம்.

"இங்க பாருங்க, அவருக்கு இதெல்லாம் புதுசு.. நான்தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீங்க என்கிட்டயே பேசி ஃபைனல் பண்ணிக்கோங்க" என்று மற்ற பார்ட்னர்ஸ் முன்னிலையிலேயே நடிகரின் வாயை அடைத்திருக்கிறார் அந்தச் செகண்ட் சேனல்.

பார்ட்னர்ஸ் முன்: பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல், மனைவியையும் விரட்டிவிட்டு சொர்க்கமே இந்தச் செகண்ட் சேனல்தான் என்று சுற்றிய நடிகருக்கு, இந்தச் சம்பவம் பெரும் அவமானத்தைத் தந்துள்ளது. தொழில் பார்ட்னர்கள் பலரும், "என்னப்பா இது.. இவ்வளவு பெரிய நடிகருக்கு இந்த நிலைமையா? சொந்தப் பணத்தைப் போட்டுட்டு இப்போ அந்தம்மா முன்னாடி கைகட்டி நிக்கிறாரே" என்று பின்னால் பேசிச் சிரிக்கிறார்களாம்.

தொழில் ரீதியாகப் பல கோடிகள் கைமாறினாலும், மற்றவர்கள் முன்னிலையில் தனக்கு மரியாதை இல்லை, தன்னை ஒரு பொம்மையாகத்தான் நடத்துகிறார்கள் என்பதை நடிகர் இப்போது உணரத் தொடங்கியுள்ளார். தொழிலை வேண்டுமானால் மாற்றிவிடலாம், ஆனால் மாட்டிக்கொண்ட இந்தச் செகண்ட் சேனல் வலையில் இருந்து எப்படி மாறுவது என்று தெரியாமல், பார்ட்னர்கள் முன்னாடி அசிங்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த வாரிசு நடிகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X