சோலோவாக நடிக்க பயப்படுகிறாரா உச்ச நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த மேட்டர் தான் காரணமா?

By Staff

சென்னை: ஒரு காலத்தில் சோலோவாக நடித்து பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த அந்த உச்ச நடிகர் சமீப காலமாக சோலோவாக நடிக்கவே பயப்படுகிறார் என பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

தொடர்ந்து நடிகர் மற்ற நடிகர்களை துணைக்கு கொண்டே நடித்து வர அந்த விஷயம் தான் காரணம் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

தனது அடுத்த படத்திற்கும் வெயிட்டான நடிகர்களை துணைக்கு வைத்துக் கொண்டு நடிக்கவே முடிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

Star actor fears about solo performance here after due to this reason?

படங்கள் ஓடவில்லை: வெயிட்டான இயக்குநர்களை வைத்து படமெடுத்து ஹிட் கொடுத்து வந்த அந்த உச்ச நடிகர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்கள் எதுவுமே பெரியளவில் ஹிட் அடிக்காமல் படு தோல்வியை சந்தித்து வருகின்றன.

நடிகர் சோலோவாகவே நடித்து வருவது தான் இதற்கு காரணம் என்றும் மற்ற பிரபல நடிகர்களை துணைக்கு வைத்துக் கொண்டு படம் நடித்தால் ஹிட் அடிக்கும் என்று அவருக்கு சிலர் அறிவுரை வழங்கிய நிலையில், அதனை ஏற்றுக் கொண்டு இனிமேல் சிங்கிளாக நடிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு அந்த நடிகர் வந்துள்ளராம்.

துணைக்கு இளம் நடிகர்கள்: உச்ச நடிகர் தனியாக வந்து திரையில் தோன்றினாலே படம் ஹிட்டாகி விடும் என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டதாகவும் இனிமேல், நடிகர் தனியாக வந்தாலும் படங்கள் ஓடாது என்பதை அறிந்து கொண்டே, இப்படி தீடிரென தனது ரூட்டையே மாற்றிக் கொண்டு சென்று வருகிறாராம் அந்த நடிகர்.

முன்னணி நடிகர்கள் யாரெல்லாம் தன்னுடன் நடிக்க சம்மதம் தெரிவிக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து நடிப்பது என்கிற முடிவுக்கு வந்து விட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார் என்றும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் நடிக்க மறுப்பு தெரிவித்து வருவதால் பக்கத்து ஸ்டேட் முன்னணி நடிகர்களை இணைத்துக் கொண்டு நடித்து வருகிறாராம்.

பாக்ஸ் ஆபிஸ் பயம்: சோலோவாக நடிகர் நடித்தாலே பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கவிடும் என்கிற நிலைமை எல்லாம் தற்போது இல்லாத நிலையில், எப்படியாவது கடைசியாக ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் தான் இளம் ஹீரோக்களுடன் கைகோர்த்து நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்து வருகிறார் உச்ச நடிகர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X