தங்கச்சிக்கு தொட்டதெல்லாம் தூள் கிளப்புது.. மனக்கவலையில் அக்கா.. உச்ச நடிகருக்கு அடுத்த தலைவலி?
சென்னை: உச்ச நடிகர் ஆரம்பத்தில் தனது வாழ்க்கையில் அதிகப்படியான கவலைகளையும் கஷ்டங்களையும் சந்தித்த நிலையில், அதிலிருந்து மீண்டு வருவதற்காக கடுமையாக உழைத்து தனக்கான ஒரு உச்ச இடத்தை அடைந்தார். இன்று வரை யாராலும் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு கடைசி வரை தான் மட்டுமே ராஜா என்கிற கம்பீர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ஆனால், ஆரம்பத்தில் இருந்தே செல்வ செழிப்புடன் சொகுசாக வாழ்ந்து வந்த நடிகரின் இரு மகள்களும் திருமண வாழ்க்கையில் பெரிய பஞ்சாயத்தை சந்தித்தனர். பெரிய கஷ்டம் வந்த நிலையில், தங்கச்சி இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து தற்போது ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார்.

சினிமாவிலும் சமீப காலமாக அவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுவதை பார்த்து அக்கா கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார் என்றும் மீண்டும் இது உச்ச நடிகருக்கே தலைவலியாக மாறியுள்ளது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
தூள் கிளப்பும் தங்கச்சி: ஆரம்பத்தில் வாழ்க்கையிலும் சினிமாவிலும் பலத்த அடிவாங்கிய தங்கச்சி கஷ்டத்தை எல்லாம் பார்த்தாச்சு இனிமேல் சந்தோஷத்தை எப்படி அறுவடை செய்வது என யோசித்து அடியெடுத்து வைத்து தொட்டதெல்லாம் பொன்னாகும் அளவுக்கு தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், அக்கா நிலைமை தான் ரொம்பவே டொக்காக போவதாக பேச்சுக்கள் புகைந்து வருகிறது. சொந்தக்காரங்களே குடும்ப விழாக்களில் குசுகுசுன்னு பேச ஆரம்பித்தது அக்காவை அப்செட் ஆக்கிவிட்டதாம்.
அப்செட்டில் அக்கா: தங்கையின் வாழ்க்கை ரொம்பவே ஹேப்பியாகி விட்டதை பார்த்த அக்காவுக்கு மனதளவில் சந்தோஷமாக இருந்தாலும், தன்னுடைய நிலைமை ஏன் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. நாமும் வெற்றிக்கனியை ருசித்து கெத்தாக நடக்க வேண்டுமே என பலத்த யோசனையில் இருக்கிறாராம்.
தந்தைக்கு தலைவலி: தனது மூத்த மகள் வருத்ததத்துடன் இருப்பதை பார்த்து ஒரு அப்பாவாக உச்ச நடிகர் ரொம்பவே மன வேதனையில் வாடி வருகிறாராம். சின்ன பொண்ணுக்கு செய்ததை போல பெரிய பொண்ணுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவரையும் ஹேப்பியாக பார்த்து விட்டால் தன்னுடைய தலைவலி தீர்ந்து விடும் என நினைத்து வருகிறாராம். அக்காவுக்கும் சீக்கிரமே சந்தோஷம் திரும்புவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











