இயக்குநருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த உச்ச நடிகர்.. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன்.. சீக்கிரமே ஸ்டார்ட்?

By Staff

சென்னை: எந்த பிரச்சனையும் பெரிதளவில் ஏற்படவில்லை என்கிற ரிப்போர்ட்கள் கிடைத்த நிலையில், அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்க உத்தரவு போட்டுள்ளாராம் உச்ச நடிகர்.

உச்ச நடிகருக்கு இந்த முறை பெரிய இடங்களில் இருந்தே அனைத்து ஏற்பாடுகளும் குவியத் தொடங்கிய நிலையில், இயக்குநருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.

சமீபத்தில், அதற்காக நடந்த ஒரு விஷயத்தில் இயக்குநரை அழைத்து ஒரே ஒரு கண்டிஷன் மட்டுமே போட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிக்க வாய்ப்பில்லை

சிக்க வாய்ப்பில்லை

பல பிரபலங்களை டார்கெட் செய்து தென்னிந்தியாவை பிடிக்க பெரிய கட்சி ஒன்று ஏகப்பட்ட பிளான்களை போட்டுள்ளது. அது தொடர்பாக சில முக்கிய பிரபலங்களுக்கு விருதுகளையும், பதவிகளையும் அள்ளிக் கொடுத்து தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது. ஆனால், எந்த சூழ்ச்சியிலும் சிக்காத அந்த உச்ச நடிகர் இந்த விவகாரத்திலும் யாருக்கும் பிரச்சனை வேண்டாம் என்பதையும் எதிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே நேரடியாக செல்வதை தவிர்த்து விட்டதாக கூறுகின்றனர்.

க்ரீன் சிக்னல்

க்ரீன் சிக்னல்

அனைத்து ஆரம்ப வேலைகளையும் இயக்குநர் செய்து வைத்த நிலையில், சில விஷயங்கள் காரணமாக அப்படியே நிறுத்தி வைக்க சொல்லி இருந்த உச்ச நடிகர் தற்போது இயக்குநருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து வேலைகளை ஸ்பீட் அப் செய்ய சொல்லி இருக்கிறாராம். இதனால், உச்சகட்ட சந்தோஷத்திற்கு சென்ற இயக்குநர் இந்த முறை சோதனை முயற்சி எல்லாம் செய்யாமல், ஹிட் ஃபார்முலாவை சரியாக இறக்கி தரமான சம்பவத்தை பண்ண பக்காவாக ஸ்கெட்ச் போட்டு விட்டாராம்.

அந்த கண்டிஷன்

அந்த கண்டிஷன்

ஆனால், இயக்குநரை அழைத்து ஒரே ஒரு கண்டிஷன் அல்லது கோரிக்கையை மட்டும் வைத்து இருக்கிறாராம். முன்பு சொன்ன அளவுக்கு அதிக தேதிகளை ஒதுக்க முடியாது என்றும், தனது போர்ஷனை க்ரிஸ்ப்பாக குறைந்த நாட்களில் எடுத்து முடிக்க சொல்லி இருக்கிறாராம். தேவையில்லாமல், நேரத்தை விரையமாக்காமல் விரைவாக படத்தை வெளியிட வேண்டும் என்றும் அதே நேரத்தில் இந்த முறை மிஸ் ஆகக் கூடாது அதை மட்டும் பார்த்துக்கோங்கன்னு சொல்லி முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உறுதியளித்த இயக்குநர்

உறுதியளித்த இயக்குநர்

உச்ச நடிகரின் அந்தவொரு கண்டிஷனுக்கு ஓகே சொல்லி உள்ள இயக்குநர், எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல், கண்டிப்பாக இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் சார், கவலைப்படாதீங்க என உறுதி அளித்து இருப்பதாக கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சுக்கள் கிளம்பி இருக்கின்றன. இந்த முறை முழு உற்சாகத்தில் உச்ச நடிகர் களம் இறங்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X